கொடைக்கானல் நகர்ப்பகுதிகளில் அடிக்கடி புகும் காட்டெருமைகளால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.குடியிருப்புப் பகுதிகளுக்குள் புகும் காட்டெருமைகள் ஒரு சில நேரங்களில் தெருப் பகுதிகளில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் வாகனங்கள் மற்றும் பொதுமக்களையும் தாக்குவது வாடிக்கையான நிகழ்வாக உள்ளது. இதே போல் நேற்று கொடைக்கானல் அரசு போக்குவரத்துக் கழக பணிமனைக்குள் புகுந்த காட்டெருமை நீண்ட நேரம் உள்ளேயே உலா வந்தது.
பணி மனையை ஒட்டியுள்ள பஸ் நிலையத்திற்குள் புகுந்து விடுமோ என்று பொது மக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் அச்சத்துடன் நின்று கொண்டிருந்தனர். நீண்டநேர இழுபறிக்கு பின் பணிமனைக்குள் உள்ள புதர் பகுதிக்குள் புகுந்தது. அதன் பின்னர் பணிமனை ஊழியர்கள் நிம்மதி அடைந்தனர். கொடைக்கானல் நகர் பகுதிக்குள் உலா வரும் காட்டெருமைகளை நிரந்தரமாக வனப்பகுதிக்குள்ளே விரட்ட வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
செய்தியாளர்: அரியநாயகம்

Comments
Post a Comment