திண்டுக்கல் அவர்லேடி பள்ளி அருகே சிகேசி காலனியில் காளியம்மன் கோவில் உள்ளது. இங்கே பங்குனி உத்திர திருவிழா சிறப்பாக நடைபெறும். மேலும் ஏராளமான பக்தர்கள் காப்பு கட்டி விரதம் இருந்து நேர்த்திக்கடனாக தீச்சட்டி எடுத்து பூக்குழி இறங்குவார்கள். தினமும் பக்தர்கள் உண்டியல் காணிக்கை செலுத்துவதையும் வழக்கமாகக் கொண்டு இருப்பார்கள்.
இந்த கோயில் முன்பு தினமும் பொதுமக்களே காவல் காப்பது வழக்கம். இந்நிலையில் சிலையை குடிபோதையில் மர்ம நபர் உடைத்தார். இதுகுறித்து நகர் தெற்கு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அந்த பகுதியில் உள்ள சி சி டிவி கேமராவை ஆய்வு செய்து நள்ளிரவு நேரத்தில் குடி போதையில் அட்டகாசம் செய்த நபர் குறித்தும் ஆய்வு நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் பொதுமக்களிடம் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
செய்தியாளர்: அரியநாயகம்

Comments
Post a Comment