திண்டுக்கல் மாவட்டத்தில் தொடர் மழையால் நல்லதங்காள் அணை நிரம்பி வழிகிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து நல்ல மழை பெய்து வருகிறது. கொடைக்கானல், தாண்டிக்குடி ,ஆடலூர் உட்பட பல இடங்களில் மழை பெய்து கொண்டிருக்கிறது. இதனால் அருவிகளில் நீர் பெருக்கு ஏற்பட்டுள்ளது. மேலும் ஓடைகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து ஓடுகிறது. திண்டுக்கல் மாவட்டத்தில் பல ஆண்டுகளாக நிரம்பாத நல்லதங்காள் அணை தற்போது பெய்த மழையால் நிரம்பி வழிப்பதால் விவசாயிக்கு மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இது குறித்து விவசாயிகள் கூறியதாவது:
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அடுத்த கொத்தயம் அருகே உள்ள நல்லதங்காள் அணை நிரம்பியது . இதனால் பல ஏக்கர் விவசாயம் நீர்ப்பாசனம் பெறுகிறது. இது மகிழ்ச்சியாக உள்ளது.தொடர்ந்து மழை பெய்து வருவதால் வெள்ளப்பெருக்கு ஏற்படுவதற்கு வாய்ப்பு உள்ளது, என்றனர்.
செய்தியாளர்: அரியநாயகம்

Comments
Post a Comment