திண்டுக்கல் மாவட்டம் அய்யலூர் கரந்தமலை உட்பட பல இடங்களில் மயில்கள் எண்ணிக்கை அதிகளவு பல்கி பெருகி உள்ளது. குள்ள நரிகளின் கூட்டம் குறைந்ததால் மயில்களின் எண்ணிக்கை பல்கி பெருகி உள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் கணக்கெடுத்துள்ளனர்.தொடர்ந்து ரயில்கள் வரும்போது மோதி மயில்கள் பலியாகின்றன. இதனால் மயில்கள் சரணாலயம் அமைக்க வேண்டும் என்ற பல்வேறு தரப்பினரும் கோரிக்கை வைத்து வரும் நிலை உள்ளது.
இந்நிலையில் ரயில்களின் வேகத்தை கட்டுப்படுத்த வேண்டுமென பல்வேறு தரப்பினரும் கோரிக்கை வைத்துள்ளனர். இந்நிலையில் இன்று திண்டுக்கல் ரயில் நிலையத்தில் மைசூர் - தூத்துக்குடி செல்லும் ரயில் இன்ஜினில் பெண் மயில் அடிபட்டு இறந்தது.ரயில்வே காவல்துறையினர் மயிலின் உடலை கைப்பற்றி வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.
செய்தியாளர்: அரியநாயகம்

Comments
Post a Comment