திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி நகராட்சிக்குட்பட்ட 1வது வார்டில் அடங்கிய குண்ணமஞ்சேரி பகுதியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் கடந்த சில நாட்களாக பெரியவர்கள், சிறுவர்கள் என பத்துக்கும் மேற்பட்டோருக்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. அதில் ஒரு சிறுவனுக்கு லேசான டெங்கு அறிகுறி அடையாளம் காணப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. எனவே தொடர் காய்ச்சல் ஏற்பட்டுள்ள இந்த பகுதியில் சுகாதார துறையினர் மற்றும் நகராட்சி அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து சிறப்பு மருத்துவ முகாம் அமைத்து டெங்கு காய்ச்சல் ஏற்படாமல் தடுத்திட போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
செய்தியாளர்: சந்திரசேகர்
.jpg)
Comments
Post a Comment