திண்டுக்கல் நாகல்நகரில் சிறுமலை செட் பகுதியில் நேற்று மாலையில் கையில் பையுடன் வாலிபர் ஒருவர் சுற்றித்திரிந்தார். பின்னர் இரவு 7 மணிக்கு மேல் அப்பகுதியில் செல்போன் கோபுரம் அமைந்துள்ள இடத்துக்கு சென்ற அந்த வாலிபர், தான் வைத்திருந்த பையை கீழே வைத்தார். பின்னர் அதில் இருந்த 2 தேசியக்கொடிகள், அ.தி.மு.க., பா.ஜ.க. உள்ளிட்ட கட்சிகளின் கொடிகள், பட்டாசுகள் மற்றும் கோரிக்கை எழுதப்பட்ட மனு ஆகியவற்றை வெளியே எடுத்தார்.
பின்னர் கோரிக்கை மனுவை செல்போன் கோபுரத்தின் அருகில் வைத்துவிட்டு கொடிகள், பட்டாசுகளுடன் செல்போன் கோபுரத்தில் ஏற தொடங்கினார். இதற்குள் அப்பகுதியில் இருள் சூழ்ந்ததால் செல்போன் கோபுரத்தின் மேல் வாலிபர் ஏறுவதை யாரும் கவனிக்கவில்லை. இதற்கிடையே செல்போன் கோபுரத்தின் உச்சிக்கு சென்ற அந்த வாலிபர் தேசிய கொடிகள், அரசியல் கட்சி கொடிகளை அப்பகுதியில் கட்டி வைத்துவிட்டு பட்டாசுகளை அங்கிருந்தபடியே வெடிக்க தொடங்கினார்.
இதை எடுத்து இரவு 8 மணிக்கு அவரை கீழே இறக்கி போலீசார் அவரை கைது செய்து விசாரித்தனர். அவர் பெயர் மூக்கையா என்றும், போதையில் இது மாதிரி செய்வதும் விசாரணையில் தெரிய வந்தது. போலீசார் தொடர்ந்து அவரிடம் விசாரித்து வருகின்றனர்.
செய்தியாளர்: அரியநாயகம்

Comments
Post a Comment