வேடசந்தூர் அருகே உள்ள கோடாங்கிபட்டியை சேர்ந்தவர் வீரமணி (வயது 31) பழைய இரும்பு வியாபாரம் செய்து வருகிறார். இவர் தற்பொழுது வேடசந்தூர் தங்க ராஜா தியேட்டர் பின்புறமாக உள்ள எஸ் எஸ் தேவி நகரில் குடியிருந்து வரும் நிலையில், தனது மகள் இரண்டு வயது கிருஷ்காவிற்கு உடல் நலக் குறைவு காரணமாக திண்டுக்கல்லில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு, தனது காரில் தனது பெரியம்மா ராஜேஸ்வரி (வயது 52), மனைவி பிரியங்கா (26), மூத்த மகள் கிருஷ்கா (2), நான்கு மாத கைக்குழந்தை சாதனாதேவி ஆகியோருடன் சென்று விட்டு, மீண்டும் வேடசந்தூர் நோக்கி வந்து கொண்டிருந்த பொழுது பிரபுமில் முன்பாக திடீரென பன்றி குறுக்கே புகுந்ததால், பன்றியின் மீது மோதாமல் இருக்க காரை திருப்பியபொழுது பாலத்தின் தடுப்புச் சுவரில் பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானதில், வீரமணியின் பெரியம்மா ராஜேஸ்வரியும், நான்கு மாத கைக்குழந்தையான சாதனாதேவியும் பரிதாபமாக பலியானார்கள்.
வீரமணியின் மனைவி பிரியங்காவிற்கு கால் எலும்பு முறிந்தது. வீரமணி பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டார். இரண்டு வயது குழந்தை கிருஷ்கா காயம் இன்றி தப்பினார். விபத்து நடந்த இடத்தில் இருந்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக அனைவரையும் மீட்டு வேடசந்தூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். பன்றி குறுக்கே புகுந்ததால் நடைபெற்ற கோர சம்பவத்தில் இரண்டு பேர் பலியானதால் வேடசந்தூர் பகுதியே மிகுந்த சோகத்தில் உள்ளது.
செய்தியாளர்: அரியநாயகம்

Comments
Post a Comment