முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் 91 ஆம் ஆண்டு பிறந்த நாளை முன்னிட்டு சென்னை கொளத்தூர் அடுத்த புழல் வினாயகபுரம் பிர்லா அவென்யூ பகுதியில் உள்ள நிக்கோலா பவுண்டேசன் இந்திய தொழில் தொடர்பு கல்வி மற்றும் ஆராய்ச்சி கழகத்தின் சார்பில் , 9155 எண்ணிக்கையில் உலோகத்திலான நட்டுகள், வாஷர்கள் கொண்டு அப்துல் கலாம் சிலை வடிவமைக்கப்பட்டு, அதனை உலக சாதனை புத்தகத்தில் இடம்பெறும் நிகழ்வு நடைபெற்றது.
இந்நிகழ்வில் அதிகாரப்பூர்வ உலக சாதனை மேலாளர் கிரிஸ்டோபர் டேய்லர் கிராஃப்ட் (யு.எஸ்.ஏ) கலந்துகொண்டு சிலையை ஆய்வு மேற்கொண்டு உலக சாதனைக்கான சான்றிதழை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் புழல் காவல் உதவி கமிஷனர் ஆதிமூலம் , முன்னாள் உதவி காவல் கமிஷனர் ராமநாதன் . வார்டு கவுன்சிலர் சங்கீதா பாபு சமூக ஆர்வலர் பாபு மற்றும் நிக்கோலா பவுண்டேசன் நிறுவன தலைவர் சுந்தரபாண்டியன் செந்தமிழன் மற்றும் நிர்வாகத்துறை கல்வித்துறை ஆராய்ச்சி துறை பாதுகாப்புத்துறை சமூக பாதுகாப்புத்துறை மற்றும் தொழில்துறை சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
செய்தியாளர்: அகமது அலி

Comments
Post a Comment