Skip to main content

திண்டுக்கல்லில் கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவரை கொன்ற மனைவி..! கொலையை வீடியோ காலில் பார்த்து ரசித்த கொடூரம்..!

 திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் சந்தைபேட்டை பகுதியை சேர்ந்த சுப்பிரமணியின் மகன் நவீன்குமார்(35). இவர் தனியார் கடையில் லோடு மேனாக வேலை பார்த்து வந்தார். நேற்று இரவு தனது நண்பருடன் வீட்டை  விட்டு வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை. இன்று காலையில் கோடாங்கிபட்டி குளத்துக்கரையில் உள்ள ஒரு பாறையில் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் ரத்தவெள்ளத்தில் பிணமாக கிடந்தார். இதுகுறித்து வேடசந்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர்.



 கொலை செய்யப்பட்ட இடத்திற்கு அருகே மதுபாட்டில்கள் கிடந்தன. எனவே குடிபோதையில் உடன் வந்தவர் நவீன்குமாரை கொலை செய்துவிட்டு தப்பி ஓடி இருக்கலாம் என்று போலீசார் சந்தேகமடைந்து அவரை தேடினர். கொலை செய்யப்பட்ட நவீன்குமாருக்கு விஜயசாந்தி என்ற மனைவியும், பிரகாஷ்(6) என்ற மகனும்,தியா(3) என்ற மகளும் உள்ளனர். சம்பவ இடத்திற்கு மாவட்ட எஸ்.பி பாஸ்கரன் வந்து விசாரணை நடத்தினார். இதனை தொடர்ந்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக வேடசந்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டது. 



இதுகுறித்து போலீசார் நவீன்குமாரின் மனைவியிடம் விசாரித்தபோது தனது கணவரிடம் செல்போன் இல்லை என்றும், தன்னிடம் மட்டுமே செல்போன் இருப்பதாகவும் தெரிவித்தார். இதனையடுத்து அவரது செல்போனை வாங்கி யார் யாருக்கு போன் செய்தார் என்பது குறித்து விசாரணை நடத்தினர். இதில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனை விஜயசாந்தி கொலை செய்தது உறுதியானது. இதனையடுத்து விஜயசாந்தியிடம் போலீசார் நடத்திய விசாரணையில் அவர் உண்மையை ஒத்துக்கொண்டார். ஒட்டன்சத்திரத்தை சேர்ந்த சிவா என்ற பழனிச்சாமி(31) என்பவர் சேனன்கோட்டையில் தங்கி வேடசந்தூரில் கொலை செய்யப்பட்ட நவீன்குமாருடன் வேலை பார்த்து வந்துள்ளார். அப்போது அவர் அடிக்கடி நவீன்குமார் வீட்டுக்கு வந்தபோது விஜயசாந்தியுடன் பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியது.


இதுகுறித்து நவீன்குமாருக்கு தெரிய வரவே அவர் கண்டித்துள்ளார். எனவே அவர்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் தனது கணவரை தீர்த்துக்கட்ட விஜயசாந்தி முடிவு செய்தார். இதனை தனது கள்ளக்காதலனிடம் தெரிவித்தார். அதன்படி நேற்றிரவு வேலை முடித்து வீட்டிற்கு வந்த நவீன்குமாரை மதுகுடிக்கலாம் என்று சிவா அழைத்துள்ளார். நன்றாக மதுகுடித்த நவீன்குமாரை கீழே தள்ளி கழுத்தை அறுத்துள்ளார். பின்னர் இதுகுறித்து விஜயசாந்தியிடம், உனது கணவரை கொலை செய்துவிட்டேன் என கூறியுள்ளார். அதற்கு விஜயசாந்தி நான் நம்பமாட்டேன், வீடியோ காலில் பேசு என கூறியுள்ளார். அப்போது பிணத்தின் அருகில் நின்று கழுத்தை அறுப்பது போன்ற ரத்த வெள்ளத்தில் கிடந்த நவீன்குமாரை காட்டியபோதுதான் விஜயசாந்தி நம்பியுள்ளார். இதனைதொடர்ந்து யாருக்கும் தெரியாதது போல வீட்டிலேயே தூங்கிவிட்டார்.

கொலை செய்த சிவா ஒட்டன்சத்திரத்தில் தங்கியிருப்பது தெரிய வரவே போலீசார் அங்கு சென்று அவரை பிடித்து கைது செய்தனர். மேலும் விஜயசாந்தியையும் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தும் நடவடிக்கையில் இறங்கியுள்ளனர். கொலை நடந்த இடத்திற்கு விஜயசாந்தி வந்தபோது எந்தவித பதட்டமும் இல்லாமல் அழுவது போன்று ஆக்டிங் செய்தார். அப்போது முதலே போலீசாருக்கு அவர் மீது சந்தேகம் உறுதியானது. இதனைதொடர்ந்து அவரது செல்போனை கேட்டபோதுதான் தான் ஏற்கனவே கள்ளக்காதலனுடன் எடுத்த புகைப்படங்களை அழிக்காமல் விட்டுவிட்டோமே என நினைத்துள்ளார். போலீசார் செல்போனை ஆராய்ந்து பார்த்ததில் விஜயசாந்தியின் கள்ளக்காதல் உறுதியானது. பின்னர் அவர் கொடுத்த தகவலின் பேரிலேயே ஒட்டன்சத்திரத்தில் பதுங்கியிருந்த சிவாவையும் போலீசார் கைது செய்தனர்.


செய்தியாளர்: அரியநாயகம் 

Comments

Popular posts from this blog

3 கிராம் தங்க நகைக்காக முதியவர் கொலை 2 பேர் கைது செய்யாறில் பரபரப்பு

3 கிராம் தங்க நகைக்காக முதியவர் கொலை 2 பேர் கைது செய்யாறில் பரபரப்பு  திருவண்ணாமலை மாவட்டம் செய்யார் அடுத்த வெம்பாக்கம் வட்டம் குண்டியாந்தண்டல் கிராமத்தை சேர்ந்த மன்னாரு சாமி வயது 89 இவர் தினமும் காலை 7 மணி அளவில் குண்டியாந் தண்டல் கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோவிலுக்கு சென்று வழிபாடு செய்து வருவது வழக்கம் அதுபோல் 13 11 2025 அன்று காலை 7 மணிக்கு வீட்டிலிருந்து சென்றவர் நீண்ட நேரமாகியும் வீட்டிற்கு வராததால் உறவினர்கள் அனைவரும் அக்கம்பக்கம் தேடியதில் அதே ஊரைச் சேர்ந்த மாதவன் என்பவர் கூறியதின் பெயரில் அருகில் இருந்த காரியா மேடைக்கு அருகில் உள்ள முட்புதாரில் இறந்து கிடந்ததாகும் அவர் இறப்பில் சந்தேகம் இருப்பதாக  தூசி காவல் நிலையத்தில் புகார் பேரில் போலீசார் விசாரணை செய்தது அதில் அதே ஊரைச் சேர்ந்த சொக்கலிங்கம் மகன் தினேஷ்குமார் வயது 25 ஜன பிரகாஷ் மகன் பிரவீன் குமார் வயது 25 இருவரும் சேர்ந்து 3 கிராம் தங்கைக்காக கொலை செய்ததாக காவல் நிலையத்தில் ஒத்துக்கொண்டனர் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறது இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. செய்தியாளர் வெங்கடேஷ்

மாதவரம் பொன்னியம்மன்மேடு அருள்மிகு ஸ்ரீவரசித்தி விநாயகர் ஆலய கும்பாபிஷேக விழா

சென்னை மாதவரம் அடுத்த பொன்னியம்மன்மேடு கற்பகம் நகர், நாகவல்லி அவென்யூ வில் அமைந்துள்ள புகழ்பெற்ற அருள்மிகு ஸ்ரீவரசித்தி விநாயகர் ஆலய கும்பாபிஷேக விழா வெகு சிறப்பாக நடைபெற்றது. முன்னதாக விக்னேஸ்வர பூஜை, கோ பூஜை, நன்பூஜை, மகா கணபதி ஹோமம், மகாலட்சுமிஹோமம், நவக்கிரக ஹோமம், சுமங்கலி பூஜை, தம்பதி பூஜை, உள்ளிட்ட மூன்று கால பூஜைகள் நடைபெற்று நான்காம் கால பூஜையாக யாகசாலை பூஜை, நாடி சந்தனம் உள்ளிட்ட பூஜைகள் செய்யப்பட்டு பல்வேறு நதிகளில் இருந்து கொண்டுவரப்பட்ட புனித நீரானது கிராம பெரியவர்கள் முன்னிலையில் யாகசாலையில் இருந்து புறப்பட்டு ஆலய விமான கோபுரத்திற்கு கும்பாபிஷேகம் செய்யப்பட்டது.  அதனைத் தொடர்ந்து மூலவர் உற்சவர் அருள்மிகு வரசித்தி விநாயகருக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின்னர் கும்பாபிஷேகம் செய்யப்பட்ட புனித நீரானது அங்கு கூடியிருந்த பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது.  ஸ்ரீ வர சித்தி விநாயகர் பல்வேறு வண்ண மலர்களாலும், வாசனை திரவியங்களாலும் அலங்காரம் செய்யப்பட்டு தூப தீப ஆராதனை காண்பிக்கப்பட்டது.  கும்பாபிஷே விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்ன...

“உன் கணவனின் விந்தில் விஷம் உள்ளது... என்னுடன் உறவு கொள்..!” - சிக்கிய ‘பலான’ போதகர்..!

  கன்னியாக்குமரி மாவட்டம் தக்கலையில் உள்ள பெந்தகொஸ்தே சபையில் மதபோதகராக இருந்து வருபவர் ரெஜிமோன். சமீபத்தில் அப்பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் உடல்நலக் குறைவாக இருப்பதாக சபைக்கு வந்துள்ளார். அவருக்காக ரெஜிமோன் வேண்டுதல் செய்த நிலையிலும் அவருக்கு உடல்நிலை சரியாகவில்லை என கூறப்படுகிறது. இதனால் அவர் ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நிலையில் உடல் ஆரோக்கியம் ஏற்பட்டுள்ளது. ஆனால் அந்த பெண் சபைக்கு வராதது குறித்து கேட்ட ரெஜிமோன், சரியாக சபைக்கு வரும்படி கூற அந்த பெண்ணும் சென்றுள்ளார். அப்படி அந்த பெண் செல்லும்போதெல்லாம் அவருக்கு தனியாக பிரார்த்தனை செய்ய வேண்டும் என அழைத்து சென்ற ரெஜிமோன், உனது மார்பகம் அழகாக இருக்கிறது என்று வர்ணனை செய்து சில்மிஷ முயற்சியில் ஈடுபட்டுள்ளார். மேலும் “உனது கணவனின் விந்தில் விஷம் உள்ளது. அதனால்தான் உனக்கு உடல் நலக் கோளாறு ஏற்படுகிறது. நீ என்னுடன் உறவுக் கொண்டால் அதை சரிசெய்ய முடியும். எனது பரிசுத்தமான விந்து அந்த விஷத்தை போக்கும்” என்று கதைகளை அளந்து விட்டுள்ளார்.   சம்பவத்தன்று அந்த பெண்ணை தனியாக அழைத்துச் சென்று அவரது ஆடைகளை களைந்து அவரை வன்கொடு...