திருவண்ணாமலை அருகே உள்ள தச்சம்பட்டு காப்பு காட்டு பகுதியில் வனச்சரகர் சீனிவாசனுக்கு வந்த ரகசிய தகவலின்படி, நேற்று அதிகாலை 01:30 மணி அளவில் சீனிவாசன் தலைமையில் வனக்காப்பாளர்கள் லட்சுமி, சுல்தான், சிரஞ்சீவி, மணி வேலன், கொண்ட குழுவினர் அதிரடியாக தச்சம்பட்டு காப்புக் காட்டுக்குச் சென்று 2 புள்ளி மான்களை வேட்டையாடிய ஆண்டியார் பாளையம் கிராமத்தைச் சேர்ந்த பஞ்சமூர்த்தி (வயசு 36), விக்னேஷ் (வயசு 26), காட்டு ராஜா (வயசு 29), விஜய் (வயசு 23), ஆகிய 4 நபர்களை அதிரடியாக கைது செய்தார்கள்.
கைது செய்யும் போது இறந்த நிலையில் ஒரு புள்ளி மான் மற்றும் புள்ளிமான் மாமிசத்தை விற்பனை செய்ய இருந்த நிலையில், இறந்த நிலையில் ஒரு புள்ளி மானும், மான் தோல் மற்றும் உரிமை இல்லாத ஒரு நாட்டுத் துப்பாக்கி, நெற்றி பேட்டரி, கத்தி, மூன்று இருசக்கர வாகனங்கள் உள்ளிட்டவைகளை அதிரடியாக பறிமுதல் செய்து இரண்டு புள்ளி மான்களை வேட்டையாடிய அந்த நான்கு நபர்களையும் ரகசிய தகவலின் படி அதிரடியாக கைது செய்தார்கள்.
செய்தியாளர்: மூர்த்தி

.jpg)
Comments
Post a Comment