திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அடுத்த தேவத்தம்மன் நகரில் பழமைவாய்ந்த அருள்மிகு தேவத்தம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் நாக சதுர்த்தி விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. இவ்விழாவை முன்னிட்டு அம்மனுக்காக விரதமிருந்து மஞ்சளாடை அணிந்து வந்த பெண்கள் கோவிலின் பின்புறம் சுயம்புவாக அமைந்த புற்றுக்கு சிறப்பு வழிபாடு நடத்தி பால் மற்றும் முட்டை ஊற்றி தங்களது வேண்டுதலை நிறைவேற்றினர்.
இதனை தொடர்ந்து மலரலாங்கரத்தில் ஊஞ்சலில் வீற்றிருந்த தேவத்தம்மன் தாயாருக்கு மஹாதீபாராதனை காட்டப்பட்டது. தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இவ்விழாவில் பொன்னேரி சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் அம்மனை வழிபட்டு சென்றனர். விழா ஏற்பாடுகளை கோவில் பூசாரி காஞ்சனா மற்றும் நிர்வாகிகள் சிறப்பாக செய்திருந்தனர்.
செய்தியாளர்: சந்திரசேகர்

Comments
Post a Comment