Skip to main content

தமிழ்நாடு ஆல் மீடியா ஜர்னலிஸ்ட் யூனியன் பத்திரிகையாளர்களின் உரிமை மீட்பு ஆர்ப்பாட்டம்.

தமிழ்நாடு ஆல் மீடியா ஜர்னலிஸ்ட் யூனியன் பத்திரிகையாளர்களின் உரிமை மீட்பு ஆர்ப்பாட்டம்..


பத்திரிகையாளர்களின் சட்ட பாதுகாப்பு, உரிமை, அங்கீகாரம், இடஒதுக்கீடு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வென்றெடுக்க தமிழ்நாடு ஆல் மீடியா ஜர்னலிஸ்ட் யூனியன் தலைவர் சிவகுமார், பொதுச்செயலாளர் கதிர்வேல், துணைத்தலைவர் பெஞ்சமின் ஆகியோர் தலைமையில் 28.10.2022 அன்று காலை 10.00 மணியளவில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் மாபெரும் உரிமை மீட்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 



பாஜகவின் சென்னை பெருங்கோட்ட பொறுப்பாளர்.கரு.நாகராஜன் ஆகியோர் கலந்து கொண்டு  ஆர்ப்பாட்டத்தை துவக்கி வைத்து  சிறப்புரையாற்றினர். பாஜகவின் ஊடக பிரிவு மாநில தலைவர் ரங்கநாயகுலு, அகில இந்திய மீனவர் சங்க அண்ணா& எம்.ஜி.ஆர் திராவிட மக்கள் கழக நிறுவனர் தலைவர் முத்துராமன் சிங்கபெருமாள், புரட்சி தமிழகம் கட்சியின் நிறுவனர் & தலைவர் ஏர்போர்ட் த.மூர்த்தி, பாஜகவின் சென்னை பெருங்கோட்ட ஊடக பிரிவு பொறுப்பாளர் டி.பி.எஸ்.செந்தில்குமார் , ஆல் இந்தியா பிரஸ் மீடியா அசோசியேஷன் தலைவர்  டாக்டர் ஆ.வேல்முருகன், நான்காம் தூண் பாதுகாப்பு சங்கம் தலைவர் ஏ.ராபர்ட்ராஜ், அனைத்து உழைக்கும் பத்திரிகையாளர்கள்சங்கம்  பொதுச்செயலாளர் எஸ்.ராஜாமுகமது, சுதந்திர இந்தியா ஆல்பிரஸ் மீடியா பத்திரிகையாளர் சங்கம் துணைதலைவர் ஏ.ரஜேஷ் மற்றும் மாநிலத்துணை தலைவர்கள் மீடியாராமு,  ஜெ.பி.நாகபூஷணம், மாநில பொருளாளர் பி.நிலாவேந்தர், திருவள்ளூவர் மாவட்டம் ஸ்டன்ட் எம்.ஜெயவேல் உள்ளிட்டோர் திரளாக கலந்து கொண்டு ஆர்ப்பாட்ட கண்டன உரை நிகழ்த்தினர்.








ஆர்பாட்டத்தில் வைக்கப்பட்ட கோரிக்கைகள் விவரம் :

அங்கீகாரம்

2020ல் இருந்து புதியதாக விண்ணப்பிக்கும் செய்தியாளர்களுக்கு வழங்கப்பட வேண்டிய அரசு  அங்கீகார அட்டை நிலுவையில் வழங்கப்படாமல் உள்ள அனைத்து அங்கீகார அட்டைகளும்     உடனடியாக தரப்பட வேண்டும்.

ஆர்.என்ஐ-ல் பதிவு பெற்ற அனைத்து தினசரி, வார, மாத பதிப்புகளுக்கும், முறைப்படி பதிவு பெற்ற அனைத்து  தொலைக்காட்சி மற்றும் மின்னணு ஊடகவியலாளர்களையும் கணக்கில் கொண்டு அனைவருக்கும் அரசு அங்கீகார அட்டை வழங்கப்பட வேண்டும்.

அரசு அங்கீகார அட்டை வழங்க, பெற்றிட இ&பைலிங் மட்டும் போதும் எனவும், அச்சகத்தார் மற்றும்  ஆடிட்டர் சான்றிதழ் தேவையில்லை எனவும் அறிவிக்க வேண்டும்.

அரசு அங்கீகார அட்டை பெற்றவர்கள் மட்டுமின்றி அனைத்து பத்திரிகையாளர்களுக்கும் பாகுபாடின்றிஅரசின் அனைத்து நலத்திட்டங்களும் சென்றடைந்திட அரசு வழி வகை செய்ய வேண்டும்.

தாலுகா வாரியாக பணிபுரியும் அனைத்து பத்திரிகையாளர்களுக்கும் மாவட்ட செய்தித்துறை அங்கீகாரம் வழங்கிட வேண்டும்.

சிறிய நிறுவனம், பெரிய நிறுவனம் என்ற பாகுபாடின்றி அனைவரையும் செய்தித்துறை ஒன்றாக நடத்திட  வேண்டும்.

ஆன்லைன் மின்னணு ஊடகவியலாளர்களையும் அங்கீகரிக்கப்பட வேண்டும்.

பாதுகாப்பு

 பத்திரிகையாளர்கள், ஊடகவியலாளர்கள் நலன்களை  பாதுகாக்க பத்திரிகையாளர்கள் பாதுகாப்பு சட்டத்தை மத்திய, மாநில அரசுகள் காலதாமதமின்றி சட்டபூர்வமாக உறுதி செய்திட வேண்டும்.

அங்கீகார அட்டை உள்ளவர்களுக்கு மட்டுமில்லாமல் RNI&ல் பதிவு செய்துள்ள செய்தி நிறுவனங்களில்  பணியாற்றும் அனைத்து ஊடக பணியாளர்களுக்கும், புகைப்பட கலைஞர்களுக்கும், ஊடக அலுவலக  பணியாளர்களுக்கும், அரசு செயல்பாட்டுக்கு கொண்டு வந்துள்ள மருத்துவ காப்பீட்டு திட்டம் கிடைத்திட வழிவகை செய்யப்பட வேண்டும்.

பத்திரிகையாளர்களின் குழந்தைகளின் கல்வி, வேலைவாய்ப்பு போன்றவற்றிற்கு இட ஒதுக்கீடும், சலுகைகளும் அளித்திட வேண்டும்.

வாழ்வாதாரம்

மாநகர பத்திரிகையாளர் களுக்கு அரசின்  இலவச அடுக்குமாடி குடியிருப்புகளும், மாவட்டம் மற்றும் தாலுகாவில் பணிபுரியும் பத்திரிகையாளர்களுக்கு, அவர்கள் வசிக்கும் பகுதியிலேயே இலவச வீட்டு மனைமற்றும் இலவச வீடுகளை தந்திட வேண்டும்.

அனைத்து ஊடக நிர்வாகங்களும் குறைந்தபட்ச சம்பள விகிதத்தை கடைப்பிடிக்கிறதா என்பதை அரசும்,  வாரியமும் கண்காணித்து பத்திரிகையாளர்களுக்கான பணிப்பாதுகாப்பை உறுதி செய்திட வேண்டும்.

 பத்திரிகையாளர்களுக்கு அருணாசலபிரதேச அரசு  ஓய்வூதியமாக ரூ.25,000 அளிக்கிறது. 

இதைப்போன்றே தமிழக அரசும் பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியத்தை உயர்த்திட வேண்டும்.

கண்டனம்

 அரசு விழாக்களில் அங்கீகரிக்கப்பட்ட செய்தியாளர்கள் மட்டும் அனுமதி  என்பதை தவிர்த்து செய்தி  நிறுவனங்கள் வழங்கிய அடையாள அட்டையே போதுமானது என்ற நிலைப்பாட்டை செய்தித்துறை கடைபிடிக்க வேண்டும் காவல்துறை மற்றும் பத்திரிகையாளர்கள் இடையே ஏற்ப-டும் முரண்பாடுகளை தவிர்க்க காவல்துறை உயர் அதிகாரிகள், சட்ட வல்லுநர்கள், மூத்த பத்திரியாளர்கள் ஆகியோர் அடங்கிய சமரசகுழு அமைக்க வேண்டும்.

அரசு வழங்கும் செய்தியாளர்கள் அங்கீகார அட்டை செய்தியாளர் அட்டை வழங்குவதற்கு முறைபடுத்தப்பட்ட குழு அமைத்து வரும் ஆண்டிற்கான (2023) அரசு அங்கீகார செய்தியாளர் அடையாள அட்டைகள் உடனடியாக வழங்கப்பட வேண்டும்.

செய்தியாளர் அங்கீகார அட்டை  புதுப்பித்தல் தற்போது மூன்று மாதத்திற்கு ஒரு முறை என  நடைமுறையில் உள்ளது அதை மாற்றி பழைய படியே ஆண்டுக்கு ஒருமுறை என மாற்றிட வேண்டும்.  தமிழில் பதிவு பெற்று வெளிவரும் அனைத்து நாளிதழ்கள், பருவ இதழ்களை தமிழகத்தில் உள்ள அனைத்து நூலகங்களிலும் கிடைக்கும் படி பாகுபாடில்லாமல் நூலக அனுமதியை வழங்க வேண்டும். உள்ளிட்ட கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டது.

Comments

Popular posts from this blog

3 கிராம் தங்க நகைக்காக முதியவர் கொலை 2 பேர் கைது செய்யாறில் பரபரப்பு

3 கிராம் தங்க நகைக்காக முதியவர் கொலை 2 பேர் கைது செய்யாறில் பரபரப்பு  திருவண்ணாமலை மாவட்டம் செய்யார் அடுத்த வெம்பாக்கம் வட்டம் குண்டியாந்தண்டல் கிராமத்தை சேர்ந்த மன்னாரு சாமி வயது 89 இவர் தினமும் காலை 7 மணி அளவில் குண்டியாந் தண்டல் கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோவிலுக்கு சென்று வழிபாடு செய்து வருவது வழக்கம் அதுபோல் 13 11 2025 அன்று காலை 7 மணிக்கு வீட்டிலிருந்து சென்றவர் நீண்ட நேரமாகியும் வீட்டிற்கு வராததால் உறவினர்கள் அனைவரும் அக்கம்பக்கம் தேடியதில் அதே ஊரைச் சேர்ந்த மாதவன் என்பவர் கூறியதின் பெயரில் அருகில் இருந்த காரியா மேடைக்கு அருகில் உள்ள முட்புதாரில் இறந்து கிடந்ததாகும் அவர் இறப்பில் சந்தேகம் இருப்பதாக  தூசி காவல் நிலையத்தில் புகார் பேரில் போலீசார் விசாரணை செய்தது அதில் அதே ஊரைச் சேர்ந்த சொக்கலிங்கம் மகன் தினேஷ்குமார் வயது 25 ஜன பிரகாஷ் மகன் பிரவீன் குமார் வயது 25 இருவரும் சேர்ந்து 3 கிராம் தங்கைக்காக கொலை செய்ததாக காவல் நிலையத்தில் ஒத்துக்கொண்டனர் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறது இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. செய்தியாளர் வெங்கடேஷ்

மாதவரம் பொன்னியம்மன்மேடு அருள்மிகு ஸ்ரீவரசித்தி விநாயகர் ஆலய கும்பாபிஷேக விழா

சென்னை மாதவரம் அடுத்த பொன்னியம்மன்மேடு கற்பகம் நகர், நாகவல்லி அவென்யூ வில் அமைந்துள்ள புகழ்பெற்ற அருள்மிகு ஸ்ரீவரசித்தி விநாயகர் ஆலய கும்பாபிஷேக விழா வெகு சிறப்பாக நடைபெற்றது. முன்னதாக விக்னேஸ்வர பூஜை, கோ பூஜை, நன்பூஜை, மகா கணபதி ஹோமம், மகாலட்சுமிஹோமம், நவக்கிரக ஹோமம், சுமங்கலி பூஜை, தம்பதி பூஜை, உள்ளிட்ட மூன்று கால பூஜைகள் நடைபெற்று நான்காம் கால பூஜையாக யாகசாலை பூஜை, நாடி சந்தனம் உள்ளிட்ட பூஜைகள் செய்யப்பட்டு பல்வேறு நதிகளில் இருந்து கொண்டுவரப்பட்ட புனித நீரானது கிராம பெரியவர்கள் முன்னிலையில் யாகசாலையில் இருந்து புறப்பட்டு ஆலய விமான கோபுரத்திற்கு கும்பாபிஷேகம் செய்யப்பட்டது.  அதனைத் தொடர்ந்து மூலவர் உற்சவர் அருள்மிகு வரசித்தி விநாயகருக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின்னர் கும்பாபிஷேகம் செய்யப்பட்ட புனித நீரானது அங்கு கூடியிருந்த பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது.  ஸ்ரீ வர சித்தி விநாயகர் பல்வேறு வண்ண மலர்களாலும், வாசனை திரவியங்களாலும் அலங்காரம் செய்யப்பட்டு தூப தீப ஆராதனை காண்பிக்கப்பட்டது.  கும்பாபிஷே விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்ன...

“உன் கணவனின் விந்தில் விஷம் உள்ளது... என்னுடன் உறவு கொள்..!” - சிக்கிய ‘பலான’ போதகர்..!

  கன்னியாக்குமரி மாவட்டம் தக்கலையில் உள்ள பெந்தகொஸ்தே சபையில் மதபோதகராக இருந்து வருபவர் ரெஜிமோன். சமீபத்தில் அப்பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் உடல்நலக் குறைவாக இருப்பதாக சபைக்கு வந்துள்ளார். அவருக்காக ரெஜிமோன் வேண்டுதல் செய்த நிலையிலும் அவருக்கு உடல்நிலை சரியாகவில்லை என கூறப்படுகிறது. இதனால் அவர் ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நிலையில் உடல் ஆரோக்கியம் ஏற்பட்டுள்ளது. ஆனால் அந்த பெண் சபைக்கு வராதது குறித்து கேட்ட ரெஜிமோன், சரியாக சபைக்கு வரும்படி கூற அந்த பெண்ணும் சென்றுள்ளார். அப்படி அந்த பெண் செல்லும்போதெல்லாம் அவருக்கு தனியாக பிரார்த்தனை செய்ய வேண்டும் என அழைத்து சென்ற ரெஜிமோன், உனது மார்பகம் அழகாக இருக்கிறது என்று வர்ணனை செய்து சில்மிஷ முயற்சியில் ஈடுபட்டுள்ளார். மேலும் “உனது கணவனின் விந்தில் விஷம் உள்ளது. அதனால்தான் உனக்கு உடல் நலக் கோளாறு ஏற்படுகிறது. நீ என்னுடன் உறவுக் கொண்டால் அதை சரிசெய்ய முடியும். எனது பரிசுத்தமான விந்து அந்த விஷத்தை போக்கும்” என்று கதைகளை அளந்து விட்டுள்ளார்.   சம்பவத்தன்று அந்த பெண்ணை தனியாக அழைத்துச் சென்று அவரது ஆடைகளை களைந்து அவரை வன்கொடு...