தேனி மாவட்டம், போடி அருகே அமைந்துள்ள பெரியாத்து கோம்பை நீர்வீழ்ச்சியில் குளிக்கச் சென்ற தேனியைச் சேர்ந்த அழகுராஜா, காவியா, மற்றும் போடியைச் சேர்ந்த சஞ்சய் ஆகிய மூவரும் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார்கள். இதில் அழகுராஜா மற்றும் காவியா கடந்த மாதம் திருமணமான புதுமணத் தம்பதிகள் என்பதும் சஞ்சய் வெளிநாட்டில் படித்து விட்டு தற்போது விடுமுறைக்காக போடிக்கு வந்துள்ளார் என்பதும் தெரிய வந்துள்ளது.
போடி காவல் துறையினர், வனத்துறையினர் மற்றும் தீயணைப்பு பேரிடர் மீட்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இறந்தவர்கள் உடலை கைப்பற்றினர்.உடல் பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு, காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Comments
Post a Comment