தென்காசி மாவட்டம் இலத்தூர் கீழத்தெருவில் அமைந்திருக்கும் காஞ்சி மகான் தவத்திரு ஸ்ரீ சிவானந்த சிதம்பர சுவாமிகளின் 114வது குருபூஜை விழா நிகழும் மங்களகரமான 1200 ஆம் ஆண்டு விஸ்வா வசு வருடம்
ஆடி மாதம் 30 ஆம் நாள் பரணி நட்சத்திரத்தில் (13.8. 2025) வெள்ளிக்கிழமை சுவாமிகளின் 114 குருபூஜை விழா சிறப்பாக நடைபெற உள்ளது. காலை ஆறு மணிக்கு தன ஆகர்ஷன சங்கல்ப பூஜையும், எட்டு மணிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் யாக பூஜையும்,
ஒன்பது மணிக்கு நல்லாசிரியர் பழனி பார்வதி மீனாட்சிசுந்தரம் அவர்களின் "சித்தர்களின் மகிமை" என்ற தலைப்பில் பக்தி சொற்பொழிவும், பத்து மணிக்கு திருவாசகம் முற்றோதல் நிகழ்வும், பண்ணிரண்டு மணிக்கு அருள் பிரசாதம் வழங்கும் நிகழ்ச்சியும் நடைபெறும்.
இதில் காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை சிறப்பு இலவச "சித்த மருத்துவ முகாம் "மருத்துவர். எஸ் நடராஜன், மருத்துவர் இ சண்முகம், மருத்துவர்.
ஸ்ரீநிதி, மருத்துவர். கே. கிருஷ்ணவேணி, மருத்துவர். கே மாரி செல்வி மருத்துவக் குழுவின் "மருத்துவ முகாம் "நடைபெறுகிறது என்று விழா குழுவினர் தெரிவித்தனர்.
செய்தியாளர் சந்திரன்

Comments
Post a Comment