கும்மிடிப்பூண்டி, ஜூலை.14:
கும்மிடிப்பூண்டியில் செயல்பட்டு வரும் டி.கே.வரதராஜ் ஆசான் சிலம்ப கலைக்கூடத்தின் சார்பில் நூறு சிலம்ப மாணவர்கள் 20 நிமிடம் தீ பந்தம் சுழற்றும் உலக சாதனை நிகழ்வு கும்மிடிப்பூண்டியில் நடைபெற்றது.
கும்மிடிப்பூண்டியில் 25 ஆண்டுகளுக்கு மேலாக செயல்பட்டு வரும் டி.கே.வரதராஜ் ஆசான் சிலம்ப கலைக்கூடம் மற்றும் யுனிகோ ஓல்ட் ரெக்கார்ட் நிறுவனம் இணைந்து சிலம்ப வீரர்கள் தீப்பந்தத்தை சுழற்றி உலக சாதனை நிகழ்வை நடத்தினர்.
இந்த உலக சாதனை நிகழ்வை கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ டி. ஜெ. கோவிந்தராஜன் துவக்கி வைத்தார். சமூக ஆர்வலர் ரவி , குங்பூ பயிற்சியாளர் டி.கண்ணன் வரவேற்றனர். நிகழ்வில் கும்மிடிப்பூண்டி பேரூராட்சி தலைவர் சகிலா அறிவழகன், துணைத் தலைவர் கேசவன், கும்மிடிப்பூண்டி நகர திமுக செயலாளர் அறிவழகன் முன்னிலை வகித்தனர்.
இதனைத் தொடர்ந்து டி.கே.வரதராஜ் ஆசான் சிலம்பாட்ட கலைக்கூடத்தை சேர்ந்த 132 மாணவர்கள் தீப்பந்தத்தை சிலம்பம் போல் 20நிமிடம் சுழற்றி உலக சாதனை படைத்தனர். இவர்களது இந்த உலக சாதனை யூனிக்கோ ஓல்ட் ரெக்கார்ட் புத்தகத்தில் இடம் பெற்றது.
தொடர்ந்து நடைபெற்ற விழாவில் கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ டி.ஜெ. கோவிந்தராஜன் உலக சாதனை படைத்ததற்கான சான்றிதழை டி.கே.வரதராஜ் ஆசான் சிலம்ப கலைக்கூடத்தின் பயிற்சியாளர் ஞா.வினோத்குமார் இடம் வழங்கினர். மேலும் உலக சாதனைகயில் ஈடுபட்ட அனைத்து வீரர்களுக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது.
இந்த சாதனை சிலம்ப நிகழ்விற்கான ஏற்பாடுகளை சிலம்ப ஆசான்கள்கள் கே.ஞானமூர்த்தி, கே.ஏழுமலை, கே.ரவி ,பயிற்சியாளர் ஜி.வினோத்குமார் உள்ளிட்டோர் முன் நின்று சிறப்பாக நடத்தினர்.
செய்தியாளர் பிரான்சிஸ்

Comments
Post a Comment