கும்மிடிப்பூண்டி,பிப்.11:
கும்மிடிப்பூண்டி மேற்கு ஒன்றிய அதிமுக சார்பில் கும்மிடிப்பூண்டி அடுத்த ஆரம்பாக்கத்தில் அதிமுக சார்பிலான தேர்தல் வாக்குறுதி அடங்கிய துண்டு பிரசுரத்தை பொதுமக்களுக்கு வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.
ஆரம்பாக்கத்தில் நடைபெற்ற இந்த துண்டு பிரசுரம் வழங்கும் நிகழ்விற்கு கும்மிடிப்பூண்டி மேற்கு ஒன்றிய அதிமுக செயலாளர் ஜெ.ரமேஷ் குமார் தலைமை தாங்கினார். கும்மிடிப்பூண்டி தெற்கு ஒன்றிய அதிமுக செயலாளர் டி.சி.மகேந்திரன், மாவட்ட தகவல் தொழில் நுட்ப அணி செயலாளர் இமயம் மனோஜ், ஒன்றிய நிர்வாகிகள் கோவிந்தம்மாள் சீனன், பாலசுப்பிரமணியம், அதிமுக அண்ணா தொழிற்சங்க மாவட்ட துணை செயலாளர் பி.என்.ஆர்.நாகராஜன் முன்னிலை வகித்தனர்
இந்த நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக கும்மிடிப்பூண்டி முன்னாள் எம்எல்ஏவும் திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக அம்மா பேரவை மாவட்ட செயலாளருமான கே.எஸ்.விஜயகுமார் பங்கேற்றார்.
தொடர்ந்து ஆரம்பாக்கம் பகுதியில் கடைக்காரர்கள் பொதுமக்களிடம் அதிமுகவின் தேர்தல் வாக்குறுதி அடங்கிய துண்டு பிரசுரங்களை வழங்கிய முன்னாள் எம்எல்ஏ கே.எஸ். விஜயகுமார் வருகின்ற சட்டமன்ற தேர்தலில் அதிமுகவிற்கு ஆதரவு அளிக்க கேட்டுக் கொண்டார்.
இந்த நிகழ்வில் அதிமுக இளைஞர் மற்றும் இளம்பெண் பாசறை மாவட்ட செயலாளர் ஆர்.சேதுபதி, தகவல் தொழில் நுட்ப அணி மாவட்ட துணை செயலாளர் நந்தகுமார் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்
செய்தியாளர் பிரான்சிஸ்

.jpeg)
Comments
Post a Comment