வாரச்சந்தை ஏலம் விடுவதாக கூறி, வாயிற்கேட்டை பூட்டிய பேரூராட்சி நிர்வாகம், அலுவலகத்திற்கு வரும் பொதுமக்கள் அவதி....
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள புதுவயல் பேரூராட்சி அலுவலகத்தில் வாரச்சந்தை இன்று ஏலம் நடைபெற்று வருகிறது.
இதனால் காலை முதலே வாயில் கேட்டை பூட்டி வைத்துள்ளதால், வரி செலுத்த வந்த பொதுமக்கள் வரி செலுத்த முடியாமல் திரும்பி சென்று கவிதை அவதி அடைந்தனர்,
அங்கு வந்த பெண் ஒருவர் கூறும் போது, வாரச்சந்தை ஏலம் விடுவது என்றால் விடுமுறை நாட்களில் விடலாம், அல்லது வேறு இடங்களில் ஏலம் விடுவதற்கான நடவடிக்கைகளை எடுத்திருக்கலாம், அதை தவிர்த்து பேரூராட்சி அலுவலகத்தின் வாயிற்கேட்டை பூட்டி வைத்துள்ளது, எங்களைப் போன்று அலுவலகத்திற்கு வருபவர்களுக்கு பெருத்த ஏமாற்றத்தை தருகிறது,
அதுபோன்று ஒரு அலுவலகத்தின் வாயில் கேட்டை பூட்டுவது சட்டத்திற்கு புறம்பானது என்றும் தெரிவித்தார்.
செய்தியாளர் அண்ணாதுரை

Comments
Post a Comment