பொன்மார் முதல்நிலை ஊராட்சி போலச்சேரியில் உள்ள டிஏபிசி தனியார் அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தில் இந்திய தாய்திருநாட்டின் சுதந்திரதின விழாவையொட்டி செங்கல்பட்டு மாவட்டத்திலேயே முதல் முதலாக மிக பிரம்மாண்ட மாரத்தான் போட்டியை நடத்திய 09வதுவார்டு கவுன்சிலரும்,திமுக கட்சியின் திருப்போரூர் வடக்கு ஒன்றிய கழக இளைஞரணி துணைஅமைப்பாளருமான போலச்சேரிபி .என்.எஸ் .செந்தில் !
வருகின்ற சுதந்திர தின விழாவை முன்னிட்டு பொன்மார் DABC அடுக்குமாடி குடியிருப்போர் சங்கத்தின் ஒருங்கிணைப்பில் திமுக கட்சியின் திருப்போரூர் வடக்கு ஒன்றிய கழக இளைஞரணி செயலாளரும் பொன்மார் முதல் நிலை ஊராட்சி மன்றத்தின் ஒன்பதாவது வார்டு கவுன்சிலருமான போலச்சேரி
பி என் எஸ். செந்தில் ஏற்பாட்டில் வருகிற ஆகஸ்ட் 15 இந்திய தாய் திருநாட்டின் சுதந்திர தின விழாவை ஒட்டியும் மற்றும் போலச்சேரி பகுதி பொதுமக்களின் உடல் ஆரோக்கியத்தின் முக்கியத்துவத்தையும், அதனை பேணிக்காப்பதின் அவசியத்தையும் வலியுறுத்தி நடைபெற்ற போலச்சேரி மாரத்தான்-2025 போட்டியில் 05 வயது முதல் 60 வயது வரை சுமார் 500 க்கும் மேற்பட்டோர்கள் பங்கேற்ற மாரத்தான் போட்டி-2025 வெகு விமர்சையாக நடைபெற்றது.
செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட பொன்மார் ஊராட்சி போலச்சேரி பகுதியில் நடைபெற்ற
மாபெரும்மாரத்தான் போட்டியில் சிறுவர்கள்முதல் பெரியவர்கள் வரை அனைவரும் உற்சாகத்துடன் மாரத்தான் போட்டியில் கலந்து கொண்டு ஓடியது காண்போரை வியக்க வைத்தது. 1.5 கிலோ மீட்டர், மூன்று கிலோ மீட்டர் தூரம் என 5 வயது முதல் 60 வயது முதியவர்கள் வரை கலந்து கொண்டு ஆண்கள், பெண்கள் எனநான்கு பிரிவுகளாக நடைபெற்ற இம்மாரத்தான் போட்டியில் சுமார் 500 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்கள்.
நான்கு பிரிவுகளில் நடைபெற்ற இந்த மாரத்தான் போட்டியில் கலந்து கொண்ட அனைவருக்கும் பதக்கம் வழங்கப்பட்டது. இப்போட்டியில் நான்கு பிரிவுகளில் முதல் மூன்று இடங்களில் வெற்றி பெற்ற வீரர் வீராங்கனைகளுக்கு வெற்றிக்கோப்பை மற்றும் பதக்கங்களை சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்ட மாவட்டக்குழு துணை தலைவர் மாம்பாக்கம் ஜி.சி.அன்பச்செழியன் பொன்மார் முதல்நிலை ஊராட்சி மன்ற தலைவர் நாராயணன்
செங்கல்பட்டு மாவட்ட துணை பெருந்தலைவர் காயத்திரி அன்புச்செழியன்,மாம்பாக்கம் துணை மின் பொறியாளர் சந்தானகுமார் ,ஊராட்சி மன்ற துணைத் தலைவர் வெங்கடேசன்
ஒன்றிய கவுன்சிலர் மேலைக் கோட்டையூர்-பொன்மார் சுரேஷ்,08வதுவார்டு கவுன்சிலர் ஆர் ராஜா, 2வது-வார்டு- கவுன்சிலர் மாலதி கணபதி,3வது- வார்டு கவுன்சிலர் சுதாராணி பரணிதரன்,4-வது வார்டு கவுன்சிலர் நதியா மாரி,5-வது வார்டுகவுன்சிலர் எம்.மகேஷ்வரன்,6-வதுவார்டு கவுன்சிலர்.பி.எம்.எஸ்.ஜெயா சாமுண்டி7வது-வார்டு கவுன்சிலர்.டி.ஆர்.
சத்யபிரியாராஜன் மற்றும் கோவில் அறங்காவலர் ஈஸ்வரமூர்த்தி ஆகியோர்கள்
பங்கேற்றனர்கள்.
நிகழ்ச்சியின் நிறைவாக பி.என்.எஸ்.செந்தில் வெற்றி பெற்றவர்களை பாராட்டி வரும் காலங்களில் இதைவிட சிறப்புடன் நாம் நடத்துவோம் என தெரிவித்துக் கொண்டு கலந்து கொண்ட அனைவரையும் ஊக்கப்படுத்தி பங்கேற்ற வாலியண்டர்ஸ்களுக்கு =காலை சிற்றுண்டி உணவு வழங்கினார்.
நடைபெற்ற இம்மாபெரும் மாரத்தான் போட்டியினை போலச்சேரியில் அமைந்துள்ள டிஏபிசி ஜெமினி மற்றும் பல்வேறு குடியிருப்பு பகுதியில் வசித்துவரும் சசிகுமார் , பாலாஜி, யுவராஜ், செந்தில்நாதன், சதாசிவம் ,செந்தில்வேல், சுரேஷ் ,பாலா ,தங்கவேல், ராஜேஸ்வரன் ,கணபதி, சுரேஷ்கண்ணன், செல்வம் ,கிஷோர், ரமேஷ், தங்கமணி ,வைரம், விக்னேஷ், சிவசுப்பிரமணியம், அரவிந்தன் அருண், மனோராஜ் ,நிவேதன், மணி மற்றும் பி .என். எஸ் செந்தில் பிரதர்ஸ் ஆகியோர்கள் அனைவரையும் ஒருங்கிணைத்து செய்திருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

Comments
Post a Comment