திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் ஊராட்சி ஒன்றியம் காரனோடை அருகே ஆத்தூர் கிராமத்தில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ தேவி கருமாரியம்மன் ஆலயத்தில் 21ம் ஆண்டு கூழ் வார்த்தல் நிகழ்ச்சியும் 15 ஆம் ஆண்டு தீமிதி திருவிழாவும் வெகு சிறப்பாக நடைபெற்றது.
ஆலய தலைவர் வி.ஏ.செல்வம் தலைமையில் நடைபெற்ற திருவிழாவில் ஆலய இளைஞர் குழு தலைவர் வீரபத்திரன் முன்னிலை விகித்தார்.
முன்னதாக கடந்த ஆகஸ்ட் 1ம் தேதி வெள்ளிக்கிழமை காப்பு கட்டி விரதமிருந்த பக்தர்கள் வாடை பொங்கல், திருவிளக்கு பூஜை, பூக்கூடை ஊர்வலம், சிவன் பார்வதி திருக்கல்யாணம், முளைப்பாரி ஊர்வலம், ஸ்ரீ சிவன் பார்வதி திருவீதி உலா போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
10 நாட்கள் விரதம் இருந்த பக்தர்கள், கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு 8 மணி அளவில் அம்மன் தீச்சட்டி கரகம் ஏந்தி மகிஷாசுரமர்த்தினி அலங்காரத்துடன் குளக்கரையில் இருந்து புறப்பட்டு நூற்றுக்கும் மேற்பட்டோர் தீ மிதித்து தங்கள் நேர்த்திக்கடனை அம்மனுக்கு செலுத்தினர்.
இதில் ஆலய விழா குழுவினர்கள் எஸ்.ரவி விஜயா, என்.ராஜமாணிக்கம் விமலா, பி.மாடசாமி விஜயலட்சுமி, பாபு தரணி, முனியேந்திரன் வசுமதி, பாண்டியன் லதா, விஜயன் ரங்கநாயகி, முருகன் பிரமிளா, முனிவேல் விஜயமாலா, கோபி நித்யா, பிரியா சத்யநாராயணன், பாண்டியன் பழனியம்மாள், சுதாகர் கவிதா, யுவராணி சண்முகம், திவாகர் ரம்யா, ரவிசங்கர் கிரிஜா உள்ளிட்ட ஆத்தூர் கிராம பொதுமக்கள் மற்றும் ஸ்ரீ தேவி கருமாரியம்மன் கோயில் ஆலய இளைஞர் குழுவினர்கள் பொதுமக்கள் பக்தர்கள் என திரளாக கலந்து கொண்டனர்.
செய்தியாளர் ரஞ்சித்

Comments
Post a Comment