ஈரோடு. ஆக.13-
ஈரோடு மாவட்டம் சித்தோடு ஐஆர்டிடி அரசு பொறியியல் கல்லூரியில் போதைப் பொருட்கள் எதிர்ப்பு உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி ஈரோடு மாவட்ட ஆட்சியர் கந்தசாமி தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஆசிரியர்கள் மற்றும் மாணவ மாணவிகள் போதைப்பொருள் பயன்பாட்டிற்கு எதிரான உறுதிமொழியை ஏற்றுக்கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய ஈரோடு மாவட்ட ஆட்சியர் கந்தசாமி, ஈரோடு மாவட்டத்தில் போதைப்பொருட்கள் தடுப்பு குறித்து பள்ளி கல்லூரி மாணவ மாணவர்களிடத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக சித்தோடு ஐஆர்டிடி அரசு பொறியியல் கல்லூரியில் போதைப்பொருள் தடுப்பு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி மற்றும் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
ஈரோடு மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட போதைப் பொருட்கள் உபயோகத்தை கட்டுப்படுத்துவதற்காக 16 வகையான குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த குழுக்கள் கொடுத்த தகவல்களின் பேரில் உரிய விசாரணை நடத்தி 249 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும் போதைப் பொருட்கள் விற்பனை செய்ததற்காக 107 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. என்றார்.
இந்த நிகழ்ச்சியில் அனைத்து துறை அரசு அதிகாரிகள்,உள்ளாட்சி பிரதிநிதிகள்,காவல்துறையினர் பலர் கலந்து கொண்டனர்.
செய்தியாளர் சுந்தர் ராஜ்

Comments
Post a Comment