பெருந்தலைவர் கர்மவீரர் காமராஜரின் 123வது பிறந்தநாள் விழா தமிழகம் முழுவதும் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக பூந்தமல்லி அடுத்த மலையம்பாக்கத்தில் உள்ள எம்.எஸ்.ஜே.எம். இந்து வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் டாக்டர் கலைஞர் அறிவித்த கல்வி வளர்ச்சி நாளை முன்னிட்டு காமராஜர் பிறந்த நாள் விழா பள்ளி வளாகத்தில் நேற்று நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் பள்ளி தாளாளர் ஏ.ஆர்.வி.மலையம் சம்பத் தலைமை தாங்கினார். பள்ளியின் முதல்வர் வி. சுமதி வாச
உடற் பயிற்சி ஆசிரியர் எட்வின் அனைவரையும் வரவேற்றார்.
இதில் நந்தம்பாக்கம் கே.என்.பி.பள்ளி தாளாளர் வைகுண்ட ராமன், குமணன்சாவடி ஜவஹர்லால் நேரு வித்யாலயா பள்ளி தாளாளர் ராகேஷ் கமலக்கண்ணன், வணிகர் சங்கங்களின் பேரவை தென்சென்னை மேற்கு மாவட்ட தலைவர் கிச்சா ரமேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் டைமன் ராஜா வெள்ளையன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு காமராஜர் திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
இதையடுத்து அரசுப் பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்குவது போல இந்த பள்ளி நிர்வாகம் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் ஆறாம் வகுப்பு மற்றும் பதினோறாம் வகுப்பு படிக்கும் மாணவ மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கப்பட்டு வருகிறது. அதே போல் இந்த ஆண்டும் காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு ஆறாம் வகுப்பு முதல் 11ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவ மாணவிகள் 138 பேருக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் பள்ளியின் நிர்வாகிகள், ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவ மாணவிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
செய்தியாளர் விநோத்ர் குமார்


Comments
Post a Comment