தூத்துக்குடி ஏரலில் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டுள்ள திமுக மூத்த நிர்வாகி சக்திவேலை நேரில் சந்தித்து நலம் விசாரித்த கனிமொழி கருணாநிதி எம்.பி! தொலைபேசி வாயிலாக நலம் விசாரித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் சமீபத்தில் தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் முன்னாள் ஒன்றிய கழகத் துணைச் செயலாளர், ஏரல் பேரூர் கழக துணைச் செயலாளர் சக்திவேல் அவர்களை கழகத் தோழர்கள் நேரில் சந்தித்து நலம் விசாரிக்குமாறு கூறியிருந்தார்.
இந்த நிலையில், தூத்துக்குடி மாவட்டம், ஏரலில் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டுள்ள திமுக மூத்த நிர்வாகி சக்திவேலை, திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற குழுத் தலைவருமான கனிமொழி கருணநிதி நேரில் சந்தித்து நலம், விசாரித்து நிதியுதவி தொகையை வழங்கினார்.
மேலும், கனிமொழி கருணாநிதி எம்.பி தொலைபேசி வாயிலாக திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலினை தொடர்பு கொண்டு, முதலமைச்சர் சிறிது நேரம் திமுக மூத்த நிர்வாகி சக்திவேலிடம் உரையாடி, உடல்நிலை குறித்து நலம் விசாரித்தார்.
தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக செயலாளரும்,மீன்வளத்துறை மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சருமான அனிதா ஆர். ராதாகிருஷ்ணன், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, திமுக நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.
செய்தியாளர் ரவி

Comments
Post a Comment