தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரத்தில் தனியார் மனமகிழ் மன்றங்களைத் திறக்க அனுமதிக்கக் கூடாது என தே.மு.தி.கமாநில பொதுக்குழு உறுப்பினர் கருப்பு நிலா மா.கணேசன் கோரிக்கை விடுத்துள்ளார்.
தனியார் பள்ளிகள், கல்லூரிகள், கோயில்கள், மார்க்கெட் என பொதுமக்கள் அதிகம் வந்துசெல்லும் பகுதிகளாக இருப்பதால் அங்கு மனமகிழ் மன் றங்களைத் திறக்கக் கூடாது என பல்வேறு சமூக ஆர்வலர்கள், கட்சியினர், பொதுமக்கள் சார்பில் ஆட்சியரிடம் மனுக்கள் அளிக்கப்பட்டுள்ளன. எனினும், பணிகள் தொடர்ந்து நடைபெறுகின்றன.
தனியார் மதுக்கடைகளைத் திறப்பதன்மூலம் பள்ளி, கல்லூரி மாணவர்கள் தவறான வழியில் செல்வதற்கு வழிவகுத்து விடக் கூடாது. எனவே, தனியார் மனமகிழ் மன்றங்களைத் திறக்க மாவட்ட நிர்வாகம் அனுமதிக்கக் கூடாது பொதுமக்கள் சார்பாக கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது
செய்தியாளர் சந்திரன்

Comments
Post a Comment