ஜெயங்கொண்டம் அருகே வாரியங்காவல் கிராமத்தில் 450 க்கும் மேற்பட்ட நெசவாளர் செங்குந்தர் குல பெண்கள் இலவச மனை பட்டா கேட்டு மனு கொடுத்தனர்.
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே வாரியங்காவல் கிராமத்தில் உள்ள திருமண மண்டபத்தில் செங்குந்தர் முதலியார் ஜன சங்கத்தின் வீட்டு மனை பட்டா இல்லாத நெசவாளர் செங்குந்தர் குல மக்களுக்கு தமிழக அரசால் அறிவிக்கப்பட்ட 3 சென்ட் இலவச மனை பட்டா கேட்டு மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுப்பது சம்மந்தமான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்திற்கு செங்குந்தர் முதலியார் ஜன சங்கத்தின் மாநில தலைவர் எஸ்.என்.குருநாதன் தலைமை வகித்தார்.இந்த கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக மாநில பொருளாளர் ஜி.கணேசன் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார்.
மேலும் இந்த கூட்டத்தில் மாநில செயற்குழு உறுப்பினர் எம்.செல்வம், கடலூர் மாவட்ட அவைத் தலைவர் பி.ராசு, அரியலூர் மாவட்ட பொறுப்பாளர்கள் ஏ.முருகேசன்,ஜி.செல்வகுமார்,எஸ், ஆர்.வி.வெங்கடேசன், என்.நீலமேகம்,சி.காளிதாஸ் உள்ளிட்ட பல்வேறு பொறுப்பாளர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
மேலும் இந்த நிகழ்ச்சியில் இலவச மனை கேட்டு 450 க்கும் மேற்பட்ட பெண்கள் மனு கொடுத்தனர்.முடிவில் மாநில இளைஞர் அணி செயலாளர் வி.வெங்கடேசன் நன்றி கூறினார்.விழா ஏற்பாடுகளை செங்குந்தர் முதலியார் ஜன சங்கத்தின் பொறுப்பாளர்கள் செய்து இருந்தனர்.
செய்தியாளர் பாலு

Comments
Post a Comment