மாமல்லபுரம் அரசுப்பள்ளி மாணவ மாணவிகளுக்கு மாமல்லபுரம் நகராட்சி துணைத்தலைவர் ராகவன் உதவி
மாமல்லபுரம், பிப்.12-
மாமல்லபுரம் நகராட்சி துணைத் தலைவர் க.ராகவன் அப்பகுதி மக்களுக்கு புயல், மழை போன்ற பேரிடர் காலங்களில் உணவு, உடை, தங்குமிடம் உள்ளிட்ட வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பது, மற்றும் நகராட்சி பகுதிக்கு உட்பட்ட வார்டுகளில், பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் செய்து கொடுத்து வருகிறார்., இந்த நிலையில் மாமல்லபுரம் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகள் பூப்பந்து விளையாட்டு போட்டியில் தமிழ்நாடு மாநில அளவில் விளையாட தேர்வாகினர்.
இவர்களுக்கு தேவையான விளையாட்டு உபகரணங்கள் மற்றும் சீருடைகளை, பள்ளிக்கு நேரில் சென்று வழங்கினார். பள்ளி தலைமை ஆசிரியர், பெற்றோர் ஆசிரியர் கழக பொருளாளர் பாலன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
செய்தியாளர் தாஸ்


Comments
Post a Comment