தூத்துக்குடி ஹோலி கிராஸ் ஹோம் சயின்ஸ் கல்லூரியில் காமராஜர் பிறந்த நாள் கொண்டாட்டம்.
அருட் சகோதரி முனைவர் ரூபா அவர்களின் தலைமையிலும் துணை முதல்வர் எம் எஸ் டி மதுரவல்லி அவர்கள் தலைமையில் காமராஜர் பிறந்த நாள் கொண்டாடப்பட்டது.
கல்லூரி மாணவி களின் முயற்சியில் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி சிவந்தாகுளம் தூத்துக்குடி மாணவிகளுக்கு நோட்டு, பேனா, புத்தகம், ஜாமென்ட்ரி பாக்ஸ், கல்லூரி முதல்வர் துணை முதல்வர் அவர்களால் வழங்கப்பட்டு சிறப்பிக்கப்பட்டது.
மாணவிகளின் துணைத் தலைவி மரிய ரேச்சல் பள்ளி மாணவிகளுக்கு காமராஜரின் சிறப்புகளை எடுத்துக் கூறினால். இனிப்புகள் வழங்கி இவ்விழா இனிதே முடிவுற்றது இதனை தமிழ்த்துறை தலைவி.
முனைவர். மி.ஜோஸ்பின் ரேணுகா. முனைவர்.க. ஜெய மலர் அவர்கள் ஏற்பாடு செய்தனர்.
செய்தியாளர் ஜேம்ஸ் ரவி


Comments
Post a Comment