Skip to main content

தென்காசி ஆட்சித் தலைவர் அலுவலகம் முன்பு மூதாட்டி குடும்பத்துடன் தீக்குளிக்க முயற்சி !!

தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் குறை தீர்ப்பு கூட்டத்திற்கு வந்த பாலவிநாயகர் கோவில் தெரு,T.N.புதுக்குடி,புளியங்குடியை, சார்ந்த  செண்பகவல்லி என்ற முதியவர் ஒருவர் தன் இரு மகனுடன் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்திற்கு மனு அளிக்க வந்தார் அதில்,சுமார் 40 வருட காலமாக புறம்போக்கு இடத்தில் மண்குடிசை கட்டி வசித்து வருவதாகவும் அந்த வீட்டில் உடல் ஊனமுற்ற மகள், காசநோய் வாய்ப்பட்ட கணவர் என மிகவும் வறுமையில் வயிற்று பிழைப்பு இன்றி வாழ்ந்து வருவதாகவும்.


 இந்நிலையில் என்வீட்டின் மேல்புறம் உள்ள சக்திமாரியம்மன் கோவிலை விரிவுபடுத்தி கட்டிடம் கட்டி வருகின்றனர். அதனால் தெருவில் உள்ள கழிவுநீர் ஓடை அடைத்ததாகவும் பலமுறை மனு கொடுத்ததாகவும்  தெரிவித்தார். என் வீட்டை இடிப்பதற்காக  பரமசிவன், ஆவணி, பழனிச்சாமி , பாலசுப்பிரமணியன் கண்ணன், கார்த்தி, கணேசன், திருமலைச்செல்வி கவுன்சிலர்,  பாலமுரு கன்கவுன்சிலர் சகோதரர், மேலும் சிலர் 

 என்வீட்டை காலி செய்யவும் சொல்லுகின்றனர் எனவும் மனுகொடுத்திருந்தேன் தற்போது வரை என் மனு மீது எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. அரசாங்கத்தில  போர் குழாய் குடிதண்ணீர் பயன்படுத்தி வந்தேன் அந்த குழாய் உடைத்தனர். அதுவும் சரிசெய்யப்பட்டவில்லை.

 சுமார் 2 வருடகாலமாக தண்ணீர் இல்லாமல் கஷ்டப்பட்டு வந்தேன் இதனால் என் கணவருக்கு மிகவும் மன உளைச்சலால் உடல் நிலை மிகவும் மோசமானது. அவரை நான் அரசு மருத்துவமனையில் சேர்த்த போது அவசர அவசரமாக கழிவுநீர் வாய்க்காலை தோண்டி என் வீட்டின் அருகில்  திருப்பி விட்டுவிட்டு மூன்று நாட்களில் ஓடையை  அவசரமாக கட்டி உள்ளனர்  இதை கேட்ட போது என்னையும், என் மகளையும் அடிக்க வந்தனர். 

என் மனுமீது எந்த கருணையும் காட்டாத காரணத்தால். என் மனுக்களை சரிவர  விசாரணை செய்யப்பட்டாத காரணத்தினால்  அரசு அதிகாரி கேட்டபோது நான் பொறம்போக்கு நிலத்தில் குடிசை போட்டிருப்பதாக கூறி என் மனுவை தள்ளுபடி செய்தனர். 

எனக்கு பட்டா வழங்கவும் வாழ வழி செய்யவும் என கோரிக்கை வைத்தும் நிறைவேறாததால்  இரு மகனுடன் தீ குளிக்க முயற்சி செய்த போது காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர் அதனால் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் முன்பு சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.

செய்தியாளர் சந்திரன்

Comments

Popular posts from this blog

3 கிராம் தங்க நகைக்காக முதியவர் கொலை 2 பேர் கைது செய்யாறில் பரபரப்பு

3 கிராம் தங்க நகைக்காக முதியவர் கொலை 2 பேர் கைது செய்யாறில் பரபரப்பு  திருவண்ணாமலை மாவட்டம் செய்யார் அடுத்த வெம்பாக்கம் வட்டம் குண்டியாந்தண்டல் கிராமத்தை சேர்ந்த மன்னாரு சாமி வயது 89 இவர் தினமும் காலை 7 மணி அளவில் குண்டியாந் தண்டல் கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோவிலுக்கு சென்று வழிபாடு செய்து வருவது வழக்கம் அதுபோல் 13 11 2025 அன்று காலை 7 மணிக்கு வீட்டிலிருந்து சென்றவர் நீண்ட நேரமாகியும் வீட்டிற்கு வராததால் உறவினர்கள் அனைவரும் அக்கம்பக்கம் தேடியதில் அதே ஊரைச் சேர்ந்த மாதவன் என்பவர் கூறியதின் பெயரில் அருகில் இருந்த காரியா மேடைக்கு அருகில் உள்ள முட்புதாரில் இறந்து கிடந்ததாகும் அவர் இறப்பில் சந்தேகம் இருப்பதாக  தூசி காவல் நிலையத்தில் புகார் பேரில் போலீசார் விசாரணை செய்தது அதில் அதே ஊரைச் சேர்ந்த சொக்கலிங்கம் மகன் தினேஷ்குமார் வயது 25 ஜன பிரகாஷ் மகன் பிரவீன் குமார் வயது 25 இருவரும் சேர்ந்து 3 கிராம் தங்கைக்காக கொலை செய்ததாக காவல் நிலையத்தில் ஒத்துக்கொண்டனர் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறது இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. செய்தியாளர் வெங்கடேஷ்

மாதவரம் பொன்னியம்மன்மேடு அருள்மிகு ஸ்ரீவரசித்தி விநாயகர் ஆலய கும்பாபிஷேக விழா

சென்னை மாதவரம் அடுத்த பொன்னியம்மன்மேடு கற்பகம் நகர், நாகவல்லி அவென்யூ வில் அமைந்துள்ள புகழ்பெற்ற அருள்மிகு ஸ்ரீவரசித்தி விநாயகர் ஆலய கும்பாபிஷேக விழா வெகு சிறப்பாக நடைபெற்றது. முன்னதாக விக்னேஸ்வர பூஜை, கோ பூஜை, நன்பூஜை, மகா கணபதி ஹோமம், மகாலட்சுமிஹோமம், நவக்கிரக ஹோமம், சுமங்கலி பூஜை, தம்பதி பூஜை, உள்ளிட்ட மூன்று கால பூஜைகள் நடைபெற்று நான்காம் கால பூஜையாக யாகசாலை பூஜை, நாடி சந்தனம் உள்ளிட்ட பூஜைகள் செய்யப்பட்டு பல்வேறு நதிகளில் இருந்து கொண்டுவரப்பட்ட புனித நீரானது கிராம பெரியவர்கள் முன்னிலையில் யாகசாலையில் இருந்து புறப்பட்டு ஆலய விமான கோபுரத்திற்கு கும்பாபிஷேகம் செய்யப்பட்டது.  அதனைத் தொடர்ந்து மூலவர் உற்சவர் அருள்மிகு வரசித்தி விநாயகருக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின்னர் கும்பாபிஷேகம் செய்யப்பட்ட புனித நீரானது அங்கு கூடியிருந்த பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது.  ஸ்ரீ வர சித்தி விநாயகர் பல்வேறு வண்ண மலர்களாலும், வாசனை திரவியங்களாலும் அலங்காரம் செய்யப்பட்டு தூப தீப ஆராதனை காண்பிக்கப்பட்டது.  கும்பாபிஷே விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்ன...

“உன் கணவனின் விந்தில் விஷம் உள்ளது... என்னுடன் உறவு கொள்..!” - சிக்கிய ‘பலான’ போதகர்..!

  கன்னியாக்குமரி மாவட்டம் தக்கலையில் உள்ள பெந்தகொஸ்தே சபையில் மதபோதகராக இருந்து வருபவர் ரெஜிமோன். சமீபத்தில் அப்பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் உடல்நலக் குறைவாக இருப்பதாக சபைக்கு வந்துள்ளார். அவருக்காக ரெஜிமோன் வேண்டுதல் செய்த நிலையிலும் அவருக்கு உடல்நிலை சரியாகவில்லை என கூறப்படுகிறது. இதனால் அவர் ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நிலையில் உடல் ஆரோக்கியம் ஏற்பட்டுள்ளது. ஆனால் அந்த பெண் சபைக்கு வராதது குறித்து கேட்ட ரெஜிமோன், சரியாக சபைக்கு வரும்படி கூற அந்த பெண்ணும் சென்றுள்ளார். அப்படி அந்த பெண் செல்லும்போதெல்லாம் அவருக்கு தனியாக பிரார்த்தனை செய்ய வேண்டும் என அழைத்து சென்ற ரெஜிமோன், உனது மார்பகம் அழகாக இருக்கிறது என்று வர்ணனை செய்து சில்மிஷ முயற்சியில் ஈடுபட்டுள்ளார். மேலும் “உனது கணவனின் விந்தில் விஷம் உள்ளது. அதனால்தான் உனக்கு உடல் நலக் கோளாறு ஏற்படுகிறது. நீ என்னுடன் உறவுக் கொண்டால் அதை சரிசெய்ய முடியும். எனது பரிசுத்தமான விந்து அந்த விஷத்தை போக்கும்” என்று கதைகளை அளந்து விட்டுள்ளார்.   சம்பவத்தன்று அந்த பெண்ணை தனியாக அழைத்துச் சென்று அவரது ஆடைகளை களைந்து அவரை வன்கொடு...