Skip to main content

நல்லூர் சுங்கச்சாவடி அலுவலகத்தை முன்னாள் எம்எல்ஏ ரவிராஜ் தலைமையில் பாமகவினர் முற்றுகைப் போராட்டம்

 


செங்குன்றம் அருகே சுங்கச்சாவடி அலுவலகத்தை முற்றுகையிட்டுமுன்னாள் பாமக எம்எல்ஏ போராட்டம். மாநாட்டிற்கு சென்று திரும்பிய வாகனங்களுக்கு நள்ளிரவில் சுங்ககட்டணம் கேட்டு அனுமதிக்க மறுத்ததால் வாக்குவாதம்.



வன்னியர் சங்கம் மற்றும் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் ஞாயிறன்று பூம்புகாரில் மகளிர் மாநாடு அக்கட்சி நிறுவன தலைவர் ராமதாஸ் தலைமையில் நடைபெற்றது. மாநிலம் முழுவதிலும் இருந்து வன்னியர் மகளிர் பெருவிழா மாநாட்டிற்கு கட்சி நிர்வாகிகள் வாகனங்களில் சென்றனர். திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி, கும்மிடிப்பூண்டி சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து பாட்டாளி மக்கள் கட்சியினர் மகளிர் மாநாட்டில் கலந்து கொண்டிருந்தனர். இந்நிலையில் பாமக முன்னாள் எம்எல்ஏ ரவிராஜ் தலைமையில் அக்கட்சியினர் செங்குன்றம் அடுத்த நல்லூர் சுங்கச்சாவடி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.


 மாநாட்டிற்கு சென்று விட்டு நள்ளிரவில் திரும்பிய வாகனங்களுக்கு சுங்க கட்டணம் கேட்டு சுங்கச்சாவடி ஊழியர்கள் அடாவடி செயலில் ஈடுபட்டதாகவும், வாகனத்திலிருந்த பெண்களை ஆபாசமாக பேசியதாகவும் கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர். அனைத்து கட்சி மாநாடுகளுக்கும் வாகனங்கள் கட்டணமின்றி இயக்கப்பட்டு வரும் நிலையில் நல்லூர் சுங்கச்சாவடியில் நள்ளிரவில் வந்த வாகனங்களை அனுமதிக்காமல் ஊழியர்கள் அலைக்கழித்ததாக புகார் தெரிவித்தனர்.


 மேலும் நள்ளிரவில் பெண்களை அலைக்கழித்த சுங்கச்சாவடி ஊழியர்களை பணி நீக்கம் செய்ய வேண்டும் எனவும் அப்போது தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் பாட்டாளி மக்கள் கட்சி முன்னாள் எம்எல்ஏ ரவிராஜிடம் பேச்சுவார்த்தை நடத்தி சமரசம் செய்தனர். இதனை அடுத்து அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் சுங்கச்சாவடியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.



செய்தியாளர் ரஞ்சித்

Comments

Popular posts from this blog

3 கிராம் தங்க நகைக்காக முதியவர் கொலை 2 பேர் கைது செய்யாறில் பரபரப்பு

3 கிராம் தங்க நகைக்காக முதியவர் கொலை 2 பேர் கைது செய்யாறில் பரபரப்பு  திருவண்ணாமலை மாவட்டம் செய்யார் அடுத்த வெம்பாக்கம் வட்டம் குண்டியாந்தண்டல் கிராமத்தை சேர்ந்த மன்னாரு சாமி வயது 89 இவர் தினமும் காலை 7 மணி அளவில் குண்டியாந் தண்டல் கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோவிலுக்கு சென்று வழிபாடு செய்து வருவது வழக்கம் அதுபோல் 13 11 2025 அன்று காலை 7 மணிக்கு வீட்டிலிருந்து சென்றவர் நீண்ட நேரமாகியும் வீட்டிற்கு வராததால் உறவினர்கள் அனைவரும் அக்கம்பக்கம் தேடியதில் அதே ஊரைச் சேர்ந்த மாதவன் என்பவர் கூறியதின் பெயரில் அருகில் இருந்த காரியா மேடைக்கு அருகில் உள்ள முட்புதாரில் இறந்து கிடந்ததாகும் அவர் இறப்பில் சந்தேகம் இருப்பதாக  தூசி காவல் நிலையத்தில் புகார் பேரில் போலீசார் விசாரணை செய்தது அதில் அதே ஊரைச் சேர்ந்த சொக்கலிங்கம் மகன் தினேஷ்குமார் வயது 25 ஜன பிரகாஷ் மகன் பிரவீன் குமார் வயது 25 இருவரும் சேர்ந்து 3 கிராம் தங்கைக்காக கொலை செய்ததாக காவல் நிலையத்தில் ஒத்துக்கொண்டனர் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறது இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. செய்தியாளர் வெங்கடேஷ்

மாதவரம் பொன்னியம்மன்மேடு அருள்மிகு ஸ்ரீவரசித்தி விநாயகர் ஆலய கும்பாபிஷேக விழா

சென்னை மாதவரம் அடுத்த பொன்னியம்மன்மேடு கற்பகம் நகர், நாகவல்லி அவென்யூ வில் அமைந்துள்ள புகழ்பெற்ற அருள்மிகு ஸ்ரீவரசித்தி விநாயகர் ஆலய கும்பாபிஷேக விழா வெகு சிறப்பாக நடைபெற்றது. முன்னதாக விக்னேஸ்வர பூஜை, கோ பூஜை, நன்பூஜை, மகா கணபதி ஹோமம், மகாலட்சுமிஹோமம், நவக்கிரக ஹோமம், சுமங்கலி பூஜை, தம்பதி பூஜை, உள்ளிட்ட மூன்று கால பூஜைகள் நடைபெற்று நான்காம் கால பூஜையாக யாகசாலை பூஜை, நாடி சந்தனம் உள்ளிட்ட பூஜைகள் செய்யப்பட்டு பல்வேறு நதிகளில் இருந்து கொண்டுவரப்பட்ட புனித நீரானது கிராம பெரியவர்கள் முன்னிலையில் யாகசாலையில் இருந்து புறப்பட்டு ஆலய விமான கோபுரத்திற்கு கும்பாபிஷேகம் செய்யப்பட்டது.  அதனைத் தொடர்ந்து மூலவர் உற்சவர் அருள்மிகு வரசித்தி விநாயகருக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின்னர் கும்பாபிஷேகம் செய்யப்பட்ட புனித நீரானது அங்கு கூடியிருந்த பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது.  ஸ்ரீ வர சித்தி விநாயகர் பல்வேறு வண்ண மலர்களாலும், வாசனை திரவியங்களாலும் அலங்காரம் செய்யப்பட்டு தூப தீப ஆராதனை காண்பிக்கப்பட்டது.  கும்பாபிஷே விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்ன...

“உன் கணவனின் விந்தில் விஷம் உள்ளது... என்னுடன் உறவு கொள்..!” - சிக்கிய ‘பலான’ போதகர்..!

  கன்னியாக்குமரி மாவட்டம் தக்கலையில் உள்ள பெந்தகொஸ்தே சபையில் மதபோதகராக இருந்து வருபவர் ரெஜிமோன். சமீபத்தில் அப்பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் உடல்நலக் குறைவாக இருப்பதாக சபைக்கு வந்துள்ளார். அவருக்காக ரெஜிமோன் வேண்டுதல் செய்த நிலையிலும் அவருக்கு உடல்நிலை சரியாகவில்லை என கூறப்படுகிறது. இதனால் அவர் ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நிலையில் உடல் ஆரோக்கியம் ஏற்பட்டுள்ளது. ஆனால் அந்த பெண் சபைக்கு வராதது குறித்து கேட்ட ரெஜிமோன், சரியாக சபைக்கு வரும்படி கூற அந்த பெண்ணும் சென்றுள்ளார். அப்படி அந்த பெண் செல்லும்போதெல்லாம் அவருக்கு தனியாக பிரார்த்தனை செய்ய வேண்டும் என அழைத்து சென்ற ரெஜிமோன், உனது மார்பகம் அழகாக இருக்கிறது என்று வர்ணனை செய்து சில்மிஷ முயற்சியில் ஈடுபட்டுள்ளார். மேலும் “உனது கணவனின் விந்தில் விஷம் உள்ளது. அதனால்தான் உனக்கு உடல் நலக் கோளாறு ஏற்படுகிறது. நீ என்னுடன் உறவுக் கொண்டால் அதை சரிசெய்ய முடியும். எனது பரிசுத்தமான விந்து அந்த விஷத்தை போக்கும்” என்று கதைகளை அளந்து விட்டுள்ளார்.   சம்பவத்தன்று அந்த பெண்ணை தனியாக அழைத்துச் சென்று அவரது ஆடைகளை களைந்து அவரை வன்கொடு...