சாக்கோட்டை பகுதியில் நடைபெற்ற மஞ்சுவிரட்டில் நூற்றுக்கு மேற்பட்டோர் காயம்.... துரிதமாக செயல்பட்ட அரசுமருத்துவ குழு.... பாராட்டும் பொதுமக்கள்.
சிவகங்கை தேவஸ்தானம் சமஸ்தானத்திற்கு சொந்தமான அருள்மிகு சாக்கை வீரசேகர உமையா யாம்பிகை திருக்கோவில் காரைக்குடிக்கு அருகே உள்ள சாக்கோட்டையில் உள்ளது . இக்கோவிலின் தேர்த்திருவிழாவை முன்னிட்டு இன்று மஞ்சுவிரட்டு நடைபெற்றது.
இதில் 500க்கும் மேற்பட்ட காளைகள் கட்டவிழ்த்து விடப்பட்ட நிலையில் பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் பார்வையிட்டனர். இதில் நூற்றுக்கும் மேற்பட்டோர் காயங்கள் ஏற்பட்டு நிலையில், அங்கு செயல்பட்டு வந்த புதுவயல் அரசு ஆரம்ப நிலையத்தின் மருத்துவ குழு துரிதமான சிகிச்சையாலும், மேல் சிகிச்சைக்கு 108 வாகனம் மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர் .
மேலும் புதுவயல் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணிபுரியும் மருத்துவர் சாதனா அவர்களின் தலைமையில் செயல்பட்ட மருத்துவ குழு துரித சிகிச்சை எடுத்து காயம் அடைந்தவர்களை மேல் சிகிச்சைக்கு பரிந்துரை செய்தும், வீட்டிற்கும் அனுப்பி வைத்தனர், இதைப் பார்த்த பொதுமக்கள் மருத்துவ குழுவை வெகுவாக பாராட்டியதுடன், நன்றியும் தெரிவித்தனர்.
காயமடைந்த ஒருவர் கூறும் போது நான் பேருந்து நிலையத்தில் பேருந்து ஏறுவதற்காக நின்றிருந்தேன் அப்போது என்னை பின்பகுதியில் மாடு முட்டியதாக தெரிவித்தார், மேலும் மஞ்சுவிரட்டு பற்றி குறித்து கூறும்போது இந்த மஞ்சுவிரட்டு பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யாமல் நடத்தப்பட்ட மஞ்சுவிரட்டு ஆகும்.
இதனால் சிறுவர்கள் முதல் பெரியோர்கள் வரை காயங்கள் ஏற்பட்டதாகவும், இதில் ஒருவர் உயிரிழப்பு ஏற்பட்டதாகவும் கூறும் இவர் இனிவரும் காலங்களில் பாதுகாப்பை உறுதி செய்து மஞ்சுவிரட்டு நடத்த வேண்டும் என்றும், அவ்வாறு இல்லையெனில் மஞ்சுவிரட்டு நடத்த அரசு தடை விதிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.
செய்தியாளர் அண்ணாதுரை

Comments
Post a Comment