சிவகங்கை மாவட்டம் அமராவதி புதூர், கணபதிபுரம் பகுதியை சேர்ந்த பாண்டி, அங்குள்ள முனீஸ்வரர் ஆலயத்தில் பூசாரியாக வேலை பார்த்து வருகிறார், இந்த நிலையில் சிவகங்கை மாவட்டம் காரைக்குடி தேவகோட்டை செல்லும் நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தபோது, கனரக வாகனம் டிப்பர் லாரி மோதியதில் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார்.
இதனை அறிந்த அப்பகுதி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர், தகவல் அறிந்து வந்த காரைக்குடி வட்டாட்சியர் ராஜா, பேச்சுவார்த்தை நடத்திய பின் உடல் பிராத பரிசோதனைக்காக காரைக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
செய்தியாளர் அண்ணாதுரை

Comments
Post a Comment