பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம். சிவகங்கை தேவஸ்தானம் சமஸ்தானத்திற்கு சொந்தமான அருள்மிகு சாக்கை வீரசேகர உமையா அம்பிகை திருக்கோவில் காரைக்குடிக்கு அருகே உள்ள சாக்கோட்டை பகுதியில் அமைந்துள்ளது.
இக்கோயிலின் தேர்த்திருவிழா என்பது வரலாற்று புகழ் பெற்றதாகும். ஆனி மாதத்தில் நடைபெறும் திருவிழா 10 நாட்கள் வெகு விமர்சையாக நடைபெறும். இதன் தொடர்ச்சியாக ஒன்பதாம் நாள் தேர் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது.
இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
நானூற்றுக்கும் மேற்பட்ட போலீஸார்கள் பாதுகாப்பு பணியினை மேற்கொண்ட நிலையில், தேவகோட்டை சார் ஆட்சியர்ஆயுஷ் வெங்கட் , வட்டாட்சியர் ராஜா, மற்றும் வருவாய் துறையினர், மருத்துவத்துறையினர், தீயணைப்பு துறையினர், மற்றும் அரசு அலுவலர்கள் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.
செய்தியாளர் அண்ணாதுரை

Comments
Post a Comment