இரண்டு மாதமாக தங்கள் பகுதிக்கு மின்சாரம் விநியோகம் இல்லை என நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்..!!
நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை சேளூர் நாடு ஊராட்சி பொதுமக்கள் இன்று நாமக்கல் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தை முற்றுகையிட்டு நாமக்கல் மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர். ச. உமாவிடம் மனு ஒன்றை வழங்கினார்கள் அதில் கடந்த 2 மாதமாக தங்களின் சேளூர் நாடு பகுதியில் மின்சாரம் விநியோகம் இல்லை.
அவர்கள் இதுகுறித்து செய்தியாளருக்கு பேட்டி அளிக்கும் போது தங்கள் பகுதி குடியிருப்புகள் மற்றும் இதர மின்சார பயன்பாட்டிற்கு மின் இணைப்பு இல்லாமல் இரவு நேரங்களில் இருட்டில் மூழ்கடிக்கப்பட்டு மிகவும் கஷ்டப்பட்டு கொண்டு இருப்பதாக அவர்கள் தெரிவித்ததோடு உடனடியாக மின் இணைப்பு வழங்க வேண்டும் என்றும் சேளூர் நாடு இருளில் மூழ்கி இருப்பதிலிருந்து வெளிச்சத்திற்கு கொண்டு வர வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை வைத்தார்கள் மேலும் கொல்லிமலை நெடுங்கா புளி பட்டியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வளாகத்தில் வழியாக செல்லக்கூடிய மின்கம்பிகள் உயர்த்த ஆபத்து ஏற்படுத்தும் அளவில் இருப்பதால் அதை பள்ளி சுற்று சுவருக்கு வெளியில் மாற்றி அமைத்து தர வேண்டும் என்றும் மேலும் மேற்கண்ட மின்கம்பம் பழுதடைந்து உடைந்து விழும் நிலையில் உள்ளதால் பள்ளி மாணவ மாணவிகளுக்கு நடப்பதற்கு முன்பு எடுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அந்த மனுவில் அவர்கள் தெரிவித்து இருக்கிறார்கள் மேலும் இப்பதிகளுக்கு குடிநீர் விநியோகமும் இல்லாமல் இப்பகுதி மக்கள் குடிநீருக்கும் அல்லல் படும் நிலைமை நீடிப்பதாகவும் அப்போது அவர்கள் தெரிவித்தார்கள்.
செய்தியாளர் முத்தையா

Comments
Post a Comment