மதுரை மாவட்டம் செல்லம்பட்டி ஊராட்சி ஒன்றியம் அய்யனார்குளம் ஊராட்சியில் பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் ஊராட்சி மன்ற தலைவர் அனிதா பிரகலாதன் தலைமையில் நடைபெற்றது
இம் முகாமில் ஊரக வளர்ச்சித் துறையின் கீழ் செயல்படுத்தப்படும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டம் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டம் புதிய உதவித்தொகை ஜல்ஜீவன் மிஷன் போன்ற அடிப்படை திட்டங்கள் தொடர்பாக கிராம மக்கள் தங்களது கோரிக்கைகளை மனுவாக அளித்தனர்.இந்நிகழ்வில் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் பிரவீனா,ஊராட்சி செயலாளர் செந்தில்குமார் உடன் இருந்தனர்.
அதனை தொடர்ந்து கொடிக்குளம் ஊராட்சியிலும் ஊராட்சி மன்ற தலைவர் வனிதா ராமன் கிராம மக்களிடமிருந்து கோரிக்கைகளை மனுவாக பெற்றார். இதில் துணைத் தலைவர் கனி ஊராட்சி செயலாளர் இளங்கோவன் உடன் இருந்தனர். செல்லம்பட்டி ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் ராமர் ஆய்வு மேற்கொண்டார்.
செய்தியாளர் செந்தில்கணேஷ்

Comments
Post a Comment