வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் என்.மணிவண்ணன் உத்தரவுப்படி, காட்பாடி போக்குவரத்து பிரிவு காவல் ஆய்வாளர் மேற்பார்வையில்
வேலூர் அடுத்த காட்பாடி சித்தூர் பஸ் நிலையத்தில் போக்குவரத்து உதவி ஆய்வாளர் கன்னியப்பன், சிறப்பு உதவி ஆய்வாளர் மேகநாதன் ஆகியோர் 2 சக்கர வாகனங்களை ஆய்வு செய்தனர்.
தலைக்கவசம், ஓட்டுநர் உரிமம் இல்லாதவர்கள், 2 சக்கர வாகன உரிமம் ஆகியவற்றை ஆய்வு செய்து அபராதம் விதித்தனர். அபராத தொகையை நீதிமன்றத்தில் கட்ட சொல்லி அறிவுறுத்தினர். போக்குவரத்து விதிமுறைகளை கடைபிடிக்க வாகன ஓட்டிகளுக்கு அறிவுரைகள் வழங்கினர்.
செய்தியாளர் வாசுதேவன்

Comments
Post a Comment