வேலூர் மாநகர், அரியூர் கார்த்தி நகரில் எழுந்தருளி அருள் பாலித்து பக்தர்களின் குறைகளை நீக்கி சகல ஐஸ்வர்யத்தை அள்ளிக் கொடுத்துக் கொண்டிருக்கும் ஷுரடி ஸ்ரீ அக்ஷ்ய பாபாவிற்கு பதினோராம் ஆண்டு குரு பூர்ணிமா பெருவிழா நேற்று வெகு விமரிசையாக நடந்தது.
பதினோராம் ஆண்டு குரு பூர்ணிமா பெரு விழாவை முன்னிட்டு காலையில் அபிஷேகம் மற்றும் நான்கு வேளை ஆரத்தி தொடர் அன்னதானம் நடைபெற்றது. அதாவது அதிகாலை 5 மணிக்கு காக்கட ஆரத்தியும், காலை 6:30 மணிக்கு அபிஷேகமும், காலை 7.30 மணிக்கு நைவேத்தியம், ஆரத்தியும், பிற்பகல் 11 மணிக்கு அபிஷேகமும், நண்பகல் 12 மணிக்கு மத்திய ஆரத்தியும், மாலை 5:30 மணிக்கு அபிஷேகமும், மாலை 6:30 மணிக்கு ஆரத்தி நடந்தது. இரவு 7.30 மணிக்கு சாவடி ஊர்வலமும், இரவு 8 மணிக்கு சாவடி ஆரத்தி அன்னதானமும், இரவு 10 மணிக்கு சேஜ் ஆரத்தியும் நடந்தது. இரவு 8 மணிக்கு விசேஷ புஷ்ப அலங்காரத்துடன் பல்லக்கு சாவடி ஊர்வலம் நடைபெற்றது. பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு ஸ்ரீ அக்ஷ்ய பாபாவின் அருளை பெற்றனர். குரு பூர்ணிமா அன்று இரவு கண் விழித்திருந்தால் தங்களின் கோரிக்கைகள் பாபாவின் அருளால் நிச்சயம் நிறைவேற்றப்படும் என்று ஒரு ஐதீகம் குறிப்பிடுகிறது. அபிஷேக நேரங்களின் போது பக்தர்களின் கரங்களால் வலம்புரி சங்கினால் ஸ்ரீ அக்ஷ்ய பாபாவிற்கு பால் அபிஷேகம் செய்யலாம் என ஆலய நிர்வாகம் தெரிவித்துள்ளது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு பாபாவின் அருளை பெற்றனர். விழாவுக்கான அனைத்து விதமான ஏற்பாடுகளையும் ஆலய நிர்வாகி செய்திருந்தார்.
செய்தியாளர் வாசுதேவன்

Comments
Post a Comment