Skip to main content

வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து துறை அலுவலர்களுடன் அமைச்சர் ஆய்வு!

கன்னியாகுமரி மாவட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும்                    வளர்ச்சித்திட்ட பணிகள் குறித்து துறை அலுவலர்களுடன்                          பால்வளத்துறை அமைச்சர்  த.மனோ தங்கராஜ் கலந்தாய்வு  மேற்கொண்டார்.

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலக நாஞ்சில் கூட்டரங்கில், பல்வேறு துறைகள் மூலம் நடைபெற்றுவரும் வளர்ச்சித்திட்ட பணிகள் குறித்து,                    துறை அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர்                பி.என்.ஸ்ரீதர் தலைமையில், பால்வளத்துறை அமைச்சர் த.மனோ தங்கராஜ் நேற்று (01.07.2023) ஆய்வு மேற்கொண்டு தெரிவிக்கையில் - கன்னியாகுமரி மாவட்டத்திற்குட்பட்ட வருவாய்த்துறை, பொதுப்பணித்துறை (கட்டடம், நீர்வளம்), ஊரக வளர்ச்சி முகமை, மகளிர் திட்டம், மாநகராட்சி, நகராட்சிகள், பேரூராட்சிகள், ஊராட்சிகள், நெடுஞ்சாலைத்துறை உட்பட பல்வேறு துறைகள் சார்பில், நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்டப்பணிகள் முன்னேற்றம் குறித்தும், முடிவடைந்த பணிகள் குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டதோடு, ஒவ்வொரு துறைக்கும் பொதுமக்கள் அளித்த கோரிக்கை மனுக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து கேட்டறியப்பட்டது.

பொதுப்பணித்துறை நீர்வள ஆதார அமைப்பு, கட்டடம், கடலரிப்பு தடுப்புக் கோட்டம், நெடுஞ்சாலை ஆகியவற்றின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்டப் பணிகளை விரைந்து முடித்திட துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. வளர்ச்சி பணிகளின் செயலாக்கத்தின்போது ஏற்படும் தடைகளுக்கு தீர்வு காண்பது குறித்தும் விவாதிக்கப்பட்டது. மாவட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளில் ஏதேனும் தடைகள் மற்றும் இடர்பாடுகள் ஏற்படின் அதுகுறித்து மாவட்ட நிர்வாகத்திற்கு தெரிவிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. 

ஒவ்வொரு வீடுகளிலும் உறிஞ்சு குழிகள் அமைக்கவும், குப்பைகளை உரமாக மாற்றவும், பிளாஸ்டிக் பயன்பாட்டை முற்றிலுமாக அகற்றவும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என துறை சார்ந்த் அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. நகராட்சி பகுதிகளில் அடிப்படை கட்டமைப்புகளை மேம்படுத்தவும், மீன் சந்தை உள்ளிட்ட பகுதிகளை தூய்மையாக வைத்திருக்க வேண்டுமெனவும், நெடுஞ்சாலைகள் துறை சார்பில் நடைபெற்று வரும் சாலைப்பணிகள், பாலப் பணிகளை விரைந்து முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது

இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் ஜெ.பாலசுப்பிரமணியம், நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர் ஆனந்த் மோகன்,  பத்மநாபபுரம் உதவி ஆட்சியர் எச்.ஆர்.கௌசிக், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் பாபு, நெடுஞ்சாலைத் துறை செயற்பொறியாளர் பாஸ்கரன், உதவி இயக்குநர் (பேரூராட்சிகள்) விஜயலெட்சுமி, மாநகராட்சி செயற்பொறியாளர் பாலசுப்பிரமணியம், பொதுப்பணித் துறை செயற்பொறியாளர் வெள்ளைசாமி ராஜ் உட்பட அனைத்துத்துறை சார்ந்த உயர் அலுவலர்கள் பலர் கலந்து கொண்டார்கள்.


செய்தியாளர் வாசுதேவன் 

Comments