நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு விவேகானந்தா கலை மற்றும் அறிவியல் மகளிர் (தன்னாட்சி) கல்லூரிக்கு சிறந்த கல்லூரிக்கான விருது இந்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை கூட்டமைப்பு மற்றும் இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி தாள் நிறுவனம் இணைந்து வழங்கி உள்ளது
இந்த சிறந்த கல்லூரிக்கான விருது வழங்கும் விழா சென்னையில் நடைபெற்றது இந்த விழாவில் மருத்துவம், செவிலியர், பொறியியல், கலை அறிவியல், போன்ற தமிழகத்தில் உள்ள பல கல்லூரிகள் பங்கு பெற்ற
. இதில் கலை அறிவியல் கல்லூரிக்கான விருதை. திருச்செங்கோடு விவேகனந்தா கலை அறிவியல் கல்லூரிக்கு சிறந்த பெண் தொழில் முனைவோர்க்கான நடவடிக்கைகளைப் பாராட்டி இந்த விருது வழங்கப்பட்டது இவ் விருதை தமிழக பால்வள மேம்பாட்டுத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் வழங்க கல்லூரி முதல்வர் டாக்டர்.பேபி ஷகிலா பெற்றுக்கொண்டார். விருதை தங்கள் சார்பில் பெற்றுக்கொண்டு வந்த கல்லூரி முதல்வர் டாக்டர்.பேபி ஷகிலாவை விவேகானந்தா கல்வி நிறுவனங்களின் தாளாளர் மற்றும் செயலர் டாக்டர் மு.கருணாநிதி மேலாண்மை இயக்குநர் கிருஷ்ணவேணி கருணாநிதி துணைத் தாளாளர் டாக்டர் .கிருபாநிதி கருணாநிதி, துணை இயக்குநர் டாக்டர் நிவேதனா கிருபாநிதி விவேகானந்தா கல்வி நிறுவனங்களின் நிர்வாக இயக்குனர் டாக்டர் குப்புசாமி, தலைமை நிர்வாகி சொக்கலிங்கம், ,அட்மிஷன் இயக்குநர் சௌண்டப்பன், திறன் மேம்பாட்டு இயக்குநர் டாக்டர் வெ. குமரவேல் நிர்வாகி சொக்கலிங்கம், ஆகியோர் பாராட்டினர்.
செய்தியாளர் முத்தையா

Comments
Post a Comment