Skip to main content

வேலூரில் ஐஎஃப்எஸ் நிதி நிறுவன இயக்குநர்கள் வீடுகளில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை..!

வேலூர் மாவட்டத்தில் மட்டும் 3 இடங்களில் சோதனை மேற்கொண்டு வரும் அமலாக்கபிரிவு அதிகாரிகள் சத்துவாச்சாரி,காட்பாடி மற்றும் மேல்பாடி ஆகிய மூன்று இடங்களில் நேற்று  காலை முதல் மாலை வரை தீவிர சோதனை நடத்தினர்.

அதிக வட்டி தருவதாக கூறி பொது மக்களிடம் சுமார் ரூ.6 ஆயிரம் கோடி மோசடி செய்ததாக புகார் எழுந்தது.இதையடுத்து நிதி நிறுவன இயக்குநர்கள் ஜனார்த்தனன், லட்சுமி நாராயணன், வேத நாராயணன் மற்றும் மோகன் பாபு ஆகியோர் தலைமறைவு ஆயினர். இதையடுத்து  ஐஎஃப்எஸ் நிதி நிறுவன இயக்குநர்களின் உறவினர் வீடுகளில் அமலாக்கத்துறை திடீர் சோதனை நடத்தினர்.

வேலூர் மாவட்டம், காட்பாடி ஐஎஃப்எஸ் நிதி நிறுவன இயக்குநர்களின் உறவினர்கள் வீடுகளில் அமலாக்கத்துறை திடீர் சோதனை மேற்கொண்டனர். அதிக வட்டி தருவதாக கூறி பொதுமக்களிடம் சுமார் ரூ.6 கோடி வரை மோசடியில் ஈடுபட்ட ஐஎஃப்எஸ் நிதி நிறுவனம் மீது பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் நேற்று காலை முதல் ஐஎஃப்எஸ் நிதி நிறுவன இயக்குநர்களின் உறவினர்கள் வேலூர் மற்றும் காட்பாடி,  மேல்பாடி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள அவர்களது இல்லங்களில் அதிரடி சோதனையில் அமலாக்கத்துறை ஈடுபட்டது. இதனால் இந்த பகுதியில் பொதுமக்கள் குவிந்து வேடிக்கை பார்த்தனர். இந்த ஐஎஃப்எஸ் நிதி நிறுவன மோசடியில் காவல் துறையைச் சேர்ந்த உயர் பதவியில் உள்ள அதிகாரிகள், காவல் ஆய்வாளர்கள் இதில் ஈடுபட்டு உள்ளதும் குறிப்பிடத்தக்கது .ஆனால் அவர்கள் பணத்தை முதலீடு செய்து விட்டு திருடனை தேள் கொட்டியது போன்று சத்தம் போடாமல் அமைதி காத்து வருகின்றனர் என்பதுதான்  குறிப்பிடத்தக்கது. திருடர்களை பிடித்து தண்டிக்க வேண்டிய காவல்துறை அதிகாரிகள் இப்படி பணத்துக்கு ஆசைப்பட்டு தனியார் நிதி நிறுவனத்தில் பணத்தை முதலீடு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதில் வேலூரில் முன்னாள் டி ஐ ஜி யாக பணியாற்றிய ஆனி விஜயா மற்றும் காட்பாடி காவல் ஆய்வாளராக பணியாற்றிய ஆனந்தன் உள்ளிட்ட பலர் இந்த ஐஎஃப்எஸ் நிதி நிறுவனத்தில் கோடிக்கணக்கில் முதலீடு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


செய்தியாளர் வாசுதேவன்  

Comments