கோவை உப்பிலிபாளையம் ஆடிஸ் வீதியில் உள்ள பத்திரிகையாளர் மன்றத்தில், ஐபாவ்ஸ் தலைவர் உமா மகேஸ்வரன் பேட்டி,
இன்டி பெட் அனிமல் வெல்பேர் சொசைட்டி சார்பாக, கோவையில் முதல்முறையாக பெட் கார்னிவல், மற்றும் பூனை கண்காட்சி கோவை இந்துஸ்தான் கல்லூரியில் வருகின்ற, ஜூலை, 8ம்தேதி மற்றும் 9ம்தேதி என இரு நாட்கள் நடைபெற உள்ளது எனவும், இதில், பூனை மற்றும் நாய்களுக்கான பல்வேறு போட்டிகள் நடத்தபட்டு, அதற்கான சான்றிதழ்கள் வழங்க இருப்பதாக, கோவை உப்பிலிபாளையம் பகுதியில் உள்ள பத்திரிகையாளர் மன்றத்ததில்,
இன்டி பெட் அனிமல் வெல்பேர் சொசைட்டி தலைவர் உமா மகேஸ்வரன், செய்தியாளர்களிடம் தெரிவித்தார் மேலும் அவர் இது குறித்து கூறுகையில்...
கோவையில் வரும் 8ம்தேதி மற்றும் 9ம்தேதி, செல்ல பிரானிகள் கண்காட்சி மற்றும், சர்வதேச பூனைகள் கண்காட்சி நடத்த இருப்பதாகவும், இதில் 200க்கும் மேற்பட்ட நாய்களும் 150க்கும் மேற்பட்ட பூனைகளும், அனைத்து விதமான செல்ல பிரானிகளும் இதில் கலந்து கொள்ள இருப்பதாகவும், ஒட்டகம், மாடுகள், பாம்புகள், குதிரைகள் இடம் பெற உள்ளது, மேலும் இந்த கண்காட்சியில் இந்தியாவில் விலை உயர்ந்த நாய்கள் கூட கண்காட்சியில் இடம்பிடிக்க உள்ளதாக தெரிவித்தார், இந்த செய்தியாளர்கள் சந்திப்பின் பொழுது,
சர்வதேச கேட் நீதிபதி, அன்கரோல், துணை செயலாளர் ஸ்ரீ குமார், கோயம்புத்தூர் கேட்ரி க்ளப், ரூபேஷ் என பலரும் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது..
செய்தியாளர் பட்டுராஜ்

Comments
Post a Comment