வேலூர் மாவட்டம், காட்பாடியில் ராணுவ வீரர்கள் பயன்படுத்திக் கொள்ள ஏதுவாக இன்டர்நெட் சேவை மையம் தொடங்கப்பட்டுள்ளது.
வேலூர் மாவட்டம், காட்பாடியில் உள்ள ராணுவ வீரர்கள் சிஎஸ்டி கேண்டீன், இ சி எச் எஸ் அருகில் ஒரு இன்டர்நெட் சேவை மையம் தொடங்கப்பட்டுள்ளது. முன்னாள் மற்றும் இந்நாள் ராணுவ வீரர்களுக்கு ஏற்படும் ஆவண சிக்கல்கள் மற்றும் அதனை சரி செய்வதற்கு மிகவும் சிரமப்படுகிறார்கள்.
அதனை சரி செய்யும் பொருட்டு இச்சேவை மையம் தொடங்கப்பட்டு கடந்த இரண்டு ஆண்டுகளாக சித்தூர் பேருந்து நிலையத்தில் உள்ள ஒரு கடையில் இந்த மையம் செயல்பட்டு வருகிறது. முன்னாள் ராணுவ வீரர்களின் கோரிக்கையை ஏற்று சிஎஸ்டி கேண்டீன் அருகில் இது தொடங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த சேவை மையத்தை தொடங்கி வைக்க முன்னாள் முப்படை ராணுவ வீரர்கள் சங்கத்தின் தலைவர் சிவக்குமார் மற்றும் உறுப்பினர்கள் இ சி எச் எஸ் எஸ் ஓசி சி ஓ எல் கே என்.ட நாயுடு சோல்ஜர் போர்டு உதவி இயக்குனர் எல்டிசிஓஎல் ஞானசேகரன் கௌரவ தலைவர் கே சுந்தர் ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி இந்த இன்டர்நெட் சேவை மையத்தை தங்களது திருகரங்களால் தொடங்கி வைத்தனர் இந்த தொடக்க விழா நிகழ்ச்சியில் முன்னாள் ராணுவ வீரர்கள் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். மூன்னாள் ராணுவ வீரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் பெருமளவில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
செய்தியாளர் வாசுதேவன்

Comments
Post a Comment