காட்பாடி அடுத்த பிரம்மபுரத்தில் தேய்பிறை அஷ்டமி திதியை முன்னிட்டு மாலை 6 மணியளவில் ஸ்ரீ அகோர கபால பைரவருக்கு ரத்த அபிஷேகம் மற்றும் சிறப்பு யாகம் நடைபெற்றது. அனைத்து பக்தர்களும் திரளாக வந்து பூஜையில் கலந்து கொண்டு ஐயனின் அருள் பெற்றனர்.அதாவது பூஜையில் கலந்து கொண்ட பக்தர்கள் குடும்பத்தில்
தங்களுக்கு உள்ள கஷ்டங்கள் தீருவதோடு சுபிட்சம் ஏற்படும். கால பைரவருக்கு
மிளகு தீபம் ஏற்றி வழிபட்டால் குடும்பம் உயர்ந்த நிலைக்கு செல்லும் என்பது ஐதீகம். பூஜையில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு பிரசாதங்கள் விநியோகமசெய்யப்பட்டன. பூஜையை
அங்காளம்மன் கோயில் நிர்வாகியும், அகில இந்திய சிவாலய கூட்டமைப்பு தலைவர், ஶ்ரீஅகோர காளி பீட நிறுவனருமான அகோரி குரு ஶ்ரீராம்ராஜ் செய்திருந்தார்.
செய்தியாளர் வாசுதேவன்

Comments
Post a Comment