Skip to main content

நாமக்கல் மாவட்டத்தில் ரூ.100 கோடி மதிப்பீட்டில் மருத்துவ கட்டிட பணிகள் நிறைவு..!

 நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு அரசு மருத்துவமனையினை ரூ.23.00 கோடி மதிப்பீட்டில் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு இணையாக மேம்படுத்த  கூடுதல் மருத்துவமனை கட்டடம்  கட்டும் பணிக்கு அடிக்கல் நாட்டி, ரூ.80.00 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மாணிக்கம் பாளையம் அரசு துணை செவிலியர் பயிற்சிப்பள்ளி மாணவியர் விடுதி கூடுதல் கட்டடத்தினை

தமிழக  மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்   திறந்து வைத்தார்.  இந்நிகழ்ச்சிக்கு தமிழக வனத்துறை அமைச்சர் மருத்துவர் மா.மதிவேந்தன் , நாமக்கல் பாராளுமன்ற உறுப்பினர் .எ.கே.பி.சின்ராஜ் , திருசெங்கோடு சட்டமன்ற உறுப்பினர் ஈ.ஆர்.ஈஸ்வரன்  திருச்செங்கோடு ஜல்லிக்கட்டு பேரவைத் தலைவர் எஸ்.எம்.மதுரா செந்தில்  ஆகியோர் முன்னிலை வகிக்க, மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா  தலைமை வகித்தார்.

திருச்செங்கோடு அரசு மருத்துவமனையினை ரூ.23.00 கோடி மதிப்பீட்டில் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு இணையாக மேம்படுத்த கூடுதல் மருத்துவமனை கட்டடமானது 5835 ச.மீட்டரில் தரைத்தளத்துடன் கூடிய 5 தளங்கள் கொண்ட கட்டடமாக கட்டப்படவுள்ளது.

 இக்கூடுதல் கட்டடத்தில் பொது மருத்துவம் புறநோயாளிகளின் பிரிவு, பொது அறுவை சிகிச்சை புறநோயாளிகளின் பிரிவு, எலும்பியல் புறநோயாளிகளின் பிரிவு, ஈசிஜி, எக்ஸ்ரே, பிசியோதெரபி, இயற்கை மருத்துவம், தோல் புறநோயாளிகளின் பிரிவு, பல் புறநோயாளிகளின் பிரிவு,  குழந்தைகளுக்கான புறநோயாளிகளின் பிரிவு,  காது, மூக்கு, தொண்டை சிகிச்சை பிரிவு, ஆப்தல் வார்டு, மகப்பேறு வார்டு, முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு சிகிச்சை பிரிவு, குழந்தைகள் வார்டு, அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் போன்ற வசதிகள் கொண்டுவரப்படவுள்ளது. 

மாணிக்கம்பாளையம் அரசு துணை செவிலியர் பயிற்சிப்பள்ளி மாணவியர் விடுதி கூடுதல் கட்டடம்337.10 ச.மீட்டர் பரப்பளவில் கட்டப்பட்டுள்ளது. இந்த மாணவியர் விடுதியில் 8 தங்கும் அறைகள் உள்ளன. மேலும் பொது கழிவறைகளுடன் கூடிய அனைத்து அடிப்படை வசதிகளும் அமைக்கப்பட்டுள்ளன.  இந்நிகழ்ச்சியில்  மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் .மா.சுப்பிரமணியன்  பேசியதாவது:-

நாமக்கல் மாவட்டத்தில் இன்றைய தினம் ரூ.23.00 கோடி மதிப்பீட்டில் திருச்செங்கோடு அரசு மருத்துவமனையினை அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு இணையாக மேம்படுத்த கூடுதல் மருத்துவமனை கட்டும் பணிக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. மேலும் இராசிபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் ரூ.53.00 கோடி மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள கூடுதல் கட்டட பணிகளும், பரமத்திவேலூரில் ரூ.23.75  கோடி மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள அதிநவீன தீவிர சிகிச்சை பிரிவு கட்டும் பணிகளும் விரைவில் தொடங்கப்படவுள்ளன.

நாமக்கல் மாவட்டத்தில் மொத்தம் ரூ.100 கோடி மதிப்பீட்டில் இப்பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளது. இந்த பணிகள் நிறைவு பெற்றதும்  தமிழ்நாடு முதலமைச்சர்  மு. க. ஸ்டாலின் நாமக்கல் மாவட்டத்திற்கு நேரில் வருகை புரிந்து திறந்து வைக்க உள்ளார்கள். 

தமிழ்நாடு முதலமைச்சர்  கடந்த 06.06.2023 அன்று தமிழ்நாட்டில் 500 நகர்புற நலவாழ்வு மையத்தினை திறந்து வைத்தார்கள். அதில் நாமக்கல் மாவட்டத்திற்கு 7 நகர்புற நலவாழ்வு மையத்தினை திறந்து வைத்துள்ளார்கள். மேலும்  தமிழ்நாடு முதலமைச்சர் மு ஸ்டாலின் கடந்த 27.06.2023 அன்று இதயம் காப்போம் என்ற திட்டத்தினை கோயமுத்தூர் மாவட்டம்,  மதுக்கரை ஒன்றியம், மலுமிச்சம்பட்டியில் தொடங்கி வைத்துள்ளார்கள்

இந்த இதயம் காப்போம் திட்டமானது ஒருவருக்கு மாரடைப்பு அறிகுறிகள் ஏற்பட்டால் அருகில் இருக்கும் துணை சுகாதார நிலையம், ஆரம்ப சுகாதார நிலையம் சென்றால் 14 வகையான மாத்திரைகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த திட்டம் தமிழ்நாட்டில் உள்ள 8,000 த்திற்கும் மேற்பட்ட துணை சுகாதார நிலையங்களிலும், 2686 ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் செயல்படுத்தப்பட்டுள்ளன. இன்றையதினம் சேலம் மாவட்டம், காடையாம்பட்டியில் சிறுநீரக செயலிழப்பிலிருந்து பாதுகாக்க சிறுநீரக செயலிழப்பு பரிசோதனைத் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் 18 மாவட்ட மருத்துவமனைகள் இருந்த நிலையில்  தமிழ்நாடு முதலமைச்சர்  பொறுப்பேற்றவுடன் புதியதாக 25 அரசு தலைமை மருத்துவமனைகள் உருவாக்கப்பட்டுள்ளது.

மேலும் தமிழ்நாட்டில் 6 செவிலியர் பயிற்சிப்பள்ளி மட்டுமே இருந்த நிலையில் தற்போது  தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் புதியதாக 11 செவிலியர் பயிற்சிப்பள்ளி கட்டுவதற்கு அனுமதி அளித்துள்ளார் 

 இது போன்று தினந்தோறும் மக்களுக்காக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையின் சார்பில் புதிய திட்டப்பணிகள் அறிவிக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகின்றன என தமிழக  மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்ரமணியன் பேசினார். 

இந்நிகழ்ச்சியில் கூடுதல் இயக்குநர், மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் மரு.ஆர்.இளங்கோ மகேஸ்வரன், இணை இயக்குநர்கள் மரு.விஜயலட்சுமி (சுகாதாரம்), மரு.ராஜ்மோகன் (மருத்துவம்), நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் மரு.சாந்தா அருள்மொழி, துணை இயக்குநர்கள் மரு.பூங்கொடி (சுகாதாரப்பணிகள்), மரு.வாசுதேவன் (காசநோய்), நகர்மன்ற தலைவர்கள் (திருச்செங்கோடு) .நளினி சுரேஷ் பாபு, (பள்ளிபாளையம்) செல்வராஜ், (கொமாரபாளையம்) .விஜய் கண்ணன், நகர்மன்ற துணைத்தலைவர் (திருச்செங்கோடு).த.கார்த்திகேயன், மருத்துவ அலுவலர் மரு.மு.மோகன பானு, பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் த. .அருள், உதவி பொறியாளர் ஏஞ்சலினா ஆகியோர் உட்பட  அரசுத்துறை அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.


செய்தியாளர் முத்தையா 



Comments

Popular posts from this blog

3 கிராம் தங்க நகைக்காக முதியவர் கொலை 2 பேர் கைது செய்யாறில் பரபரப்பு

3 கிராம் தங்க நகைக்காக முதியவர் கொலை 2 பேர் கைது செய்யாறில் பரபரப்பு  திருவண்ணாமலை மாவட்டம் செய்யார் அடுத்த வெம்பாக்கம் வட்டம் குண்டியாந்தண்டல் கிராமத்தை சேர்ந்த மன்னாரு சாமி வயது 89 இவர் தினமும் காலை 7 மணி அளவில் குண்டியாந் தண்டல் கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோவிலுக்கு சென்று வழிபாடு செய்து வருவது வழக்கம் அதுபோல் 13 11 2025 அன்று காலை 7 மணிக்கு வீட்டிலிருந்து சென்றவர் நீண்ட நேரமாகியும் வீட்டிற்கு வராததால் உறவினர்கள் அனைவரும் அக்கம்பக்கம் தேடியதில் அதே ஊரைச் சேர்ந்த மாதவன் என்பவர் கூறியதின் பெயரில் அருகில் இருந்த காரியா மேடைக்கு அருகில் உள்ள முட்புதாரில் இறந்து கிடந்ததாகும் அவர் இறப்பில் சந்தேகம் இருப்பதாக  தூசி காவல் நிலையத்தில் புகார் பேரில் போலீசார் விசாரணை செய்தது அதில் அதே ஊரைச் சேர்ந்த சொக்கலிங்கம் மகன் தினேஷ்குமார் வயது 25 ஜன பிரகாஷ் மகன் பிரவீன் குமார் வயது 25 இருவரும் சேர்ந்து 3 கிராம் தங்கைக்காக கொலை செய்ததாக காவல் நிலையத்தில் ஒத்துக்கொண்டனர் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறது இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. செய்தியாளர் வெங்கடேஷ்

மாதவரம் பொன்னியம்மன்மேடு அருள்மிகு ஸ்ரீவரசித்தி விநாயகர் ஆலய கும்பாபிஷேக விழா

சென்னை மாதவரம் அடுத்த பொன்னியம்மன்மேடு கற்பகம் நகர், நாகவல்லி அவென்யூ வில் அமைந்துள்ள புகழ்பெற்ற அருள்மிகு ஸ்ரீவரசித்தி விநாயகர் ஆலய கும்பாபிஷேக விழா வெகு சிறப்பாக நடைபெற்றது. முன்னதாக விக்னேஸ்வர பூஜை, கோ பூஜை, நன்பூஜை, மகா கணபதி ஹோமம், மகாலட்சுமிஹோமம், நவக்கிரக ஹோமம், சுமங்கலி பூஜை, தம்பதி பூஜை, உள்ளிட்ட மூன்று கால பூஜைகள் நடைபெற்று நான்காம் கால பூஜையாக யாகசாலை பூஜை, நாடி சந்தனம் உள்ளிட்ட பூஜைகள் செய்யப்பட்டு பல்வேறு நதிகளில் இருந்து கொண்டுவரப்பட்ட புனித நீரானது கிராம பெரியவர்கள் முன்னிலையில் யாகசாலையில் இருந்து புறப்பட்டு ஆலய விமான கோபுரத்திற்கு கும்பாபிஷேகம் செய்யப்பட்டது.  அதனைத் தொடர்ந்து மூலவர் உற்சவர் அருள்மிகு வரசித்தி விநாயகருக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின்னர் கும்பாபிஷேகம் செய்யப்பட்ட புனித நீரானது அங்கு கூடியிருந்த பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது.  ஸ்ரீ வர சித்தி விநாயகர் பல்வேறு வண்ண மலர்களாலும், வாசனை திரவியங்களாலும் அலங்காரம் செய்யப்பட்டு தூப தீப ஆராதனை காண்பிக்கப்பட்டது.  கும்பாபிஷே விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்ன...

“உன் கணவனின் விந்தில் விஷம் உள்ளது... என்னுடன் உறவு கொள்..!” - சிக்கிய ‘பலான’ போதகர்..!

  கன்னியாக்குமரி மாவட்டம் தக்கலையில் உள்ள பெந்தகொஸ்தே சபையில் மதபோதகராக இருந்து வருபவர் ரெஜிமோன். சமீபத்தில் அப்பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் உடல்நலக் குறைவாக இருப்பதாக சபைக்கு வந்துள்ளார். அவருக்காக ரெஜிமோன் வேண்டுதல் செய்த நிலையிலும் அவருக்கு உடல்நிலை சரியாகவில்லை என கூறப்படுகிறது. இதனால் அவர் ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நிலையில் உடல் ஆரோக்கியம் ஏற்பட்டுள்ளது. ஆனால் அந்த பெண் சபைக்கு வராதது குறித்து கேட்ட ரெஜிமோன், சரியாக சபைக்கு வரும்படி கூற அந்த பெண்ணும் சென்றுள்ளார். அப்படி அந்த பெண் செல்லும்போதெல்லாம் அவருக்கு தனியாக பிரார்த்தனை செய்ய வேண்டும் என அழைத்து சென்ற ரெஜிமோன், உனது மார்பகம் அழகாக இருக்கிறது என்று வர்ணனை செய்து சில்மிஷ முயற்சியில் ஈடுபட்டுள்ளார். மேலும் “உனது கணவனின் விந்தில் விஷம் உள்ளது. அதனால்தான் உனக்கு உடல் நலக் கோளாறு ஏற்படுகிறது. நீ என்னுடன் உறவுக் கொண்டால் அதை சரிசெய்ய முடியும். எனது பரிசுத்தமான விந்து அந்த விஷத்தை போக்கும்” என்று கதைகளை அளந்து விட்டுள்ளார்.   சம்பவத்தன்று அந்த பெண்ணை தனியாக அழைத்துச் சென்று அவரது ஆடைகளை களைந்து அவரை வன்கொடு...