Skip to main content

மதுரை மத்திய சிறைவாசிகளின் பயன்பாட்டிற்காக ரஜினி ரசிகர் மன்றம் சார்பில் புத்தகங்கள் மற்றும் இசை கருவிகளை சிறை கண்காணிப்பாளாரிடம் வழங்கினர்..!

தமிழக சிறைத்துறை டிஜிபி அமரேஷ்புஜாரி ஐபிஎஸ்  கொண்டு வந்த கூண்டுக்குள் வானம் என்ற நூலகத் திட்டத்திற்கு பொதுமக்களிடம் நல்ல வரவேற்பு பெறப்பட்டு அதிக அளவில் பொதுமக்கள் சிறைவாசிகளை நல்வழிப்படுத்துவதற்காக அனைத்து மத்திய சிறைகளுக்கும் நூல்களை வழங்கி வருகின்றனர்.

தற்பொழுது திரைப்பட நடிகர்  ரஜினிகாந்த் நடித்துள்ள ஜெயிலர்  திரைப்படம் வெளிவருவதை முன்னிட்டு ரஜினி ரசிகர் மன்ற நிர்வாகிகள் சிறைத்துறைக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குவதற்கு ஏற்பாடு செய்துள்ளனர் 

அதன் அடிப்படையில் மதுரை மத்திய சிறையில் மதுரை மாவட்ட ரஜினி ரசிகர் மன்ற நிர்வாகிகள்  ஜாபர் மற்றும் பால தம்புராஜ் கூடுதல் காவல் கண்காணிப்பாளர்( ஓய்வு) திரு குமாரவேல் ஆகியோர் முன்னிலையில்சரவணன் திருப்பரங்குன்றம் பகுதி ரஜினி ரசிகர் மன்ற தலைவர் தலைமையில் சிறைவாசிகளின் பயன்பாட்டிற்காக சுமார் Rs 50,000 மதிப்பிலான நூலக புத்தகங்களை இன்று வழங்கியுள்ளனர்

 மேலும் மதுரை மத்திய சிறையில் சிறைவாசிகள் தங்கள் மன அழுத்தத்தை குறைக்கும் வகையில் அவர்களை நல்வழிப்படுத்துவதற்காக கொண்டு வரப்பட்டுள்ள இசைக் குழுவிற்கு ஜெயிலர் திரைப்பட இசை வெளியீட்டை முன்னிட்டு ரூபாய் 25000 மதிப்பில் ஆன இசைக்கருவிகளை ராமநாதபுரம் மாவட்ட ரஜினி ரசிகர் மன்ற முன்னாள் மாவட்ட செயலாளர் பால நமச்சிவாயம் அவர்கள் வழங்கியுள்ளார் இது பற்றி அவர்கள் தெரிவித்த பொழுது தலைவர் ரஜினிகாந்த் அவர்கள் நடித்துள்ள ஜெயிலர் திரைப்படம் வெளியாவதை முன்னிட்டு சிறைகளில் பல்வேறு நலத்திட்ட பணிகள் செய்வதற்கு எங்களது தலைமையிலிருந்து அறிவுறுத்தல் பெறப்பட்டுள்ளது அதன் அடிப்படையில் இன்று மதுரை மத்திய சிறைக்கு இந்த நலத்திட்ட பணிகள் செய்யப்பட்டதாக தெரிவித்துள்ளனர் இவ்விழாவில் மதுரை சரக சிறைத்துறை துணை தலைவர்  பழனி மற்றும் மதுரை மத்திய சிறை கண்காணிப்பாளர் பொறுப்பு  பரசுராமன் ஆகியோர் கலந்துகொண்டு நூல்களையும் இசைக்கருவிகளையும் பெற்றுக் கொண்டனர்.


செய்தியாளர் செந்தில்கணேஷ்  

Comments