வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் என்.மணிவண்ணன் உத்தரவுப்படி, காட்பாடி போக்குவரத்து ஆய்வாளர் ஆலோசனையின் பேரில், காட்பாடி சித்தூர் பஸ் நிலையத்தில் இருசக்கர வாகனத்தில் செல்வோர் கண்டிப்பாக ஹெல்மெட் அணிய வேண்டும், அதேப்போல் பின்னால் அமர்ந்து செல்வோரும் ஹெல்மெட் அணிந்து செல்ல வேண்டும்.
ஓட்டுநர் லைசென்ஸ் வைத்திருக்க வேண்டும். 3 பேர் வாகனத்தில் உட்கார்ந்து செல்லக்கூடாது என்பதை வலியுறுத்தி காட்பாடி போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர் கன்னியப்பன், சிறப்பு உதவி ஆய்வாளர் மேகநாதன் ஆகியோர் டூவிலரில் செல்வோரிடம் விழிப்புணர்வு நோட்டீஸை வழங்கினர்.
செய்தியாளர் வாசுதேவன்

Comments
Post a Comment