வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் உத்தரவின் பேரில் மாவட்டம் முழுவதும் கள்ளச்சாராய வேட்டை நடத்த போலீசார் முடுக்கி விடப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் குடியாத்தம் துணை காவல் கண்காணிப்பாளர் ராமமூர்த்தி தலைமையில், மாவட்ட தனிப்படை போலீசார் நடத்திய சோதனையில் குடியாத்தம் தாலுக்கா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் பெருமாள் என்பவரின் வீட்டின் பின்புறம் கள்ளச்சாராய ஊறலுக்கு பயன்படுத்தக்கூடிய 900 கிலோ எடை கொண்ட 18 வெல்ல மூட்டைகள் மற்றும் 600 கிலோ எடை கொண்ட 20 நாட்டு சர்க்கரை மூட்டைகள் என மொத்தம் 1500 கிலோ வெல்லம் மற்றும் நாட்டு சர்க்கரை பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக பெருமாள் மீது வழக்குப் பதிவு செய்து நீதிபதி முன்பு ஆஜர்படுத்தி வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.
செய்தியாளர் : வாசுதேவன்

Comments
Post a Comment