நாமக்கல் மாவட்டம் இராசிபுரம் அடுத்த பேளுக்குறிச்சி பகுதியை சேர்ந்தவர் மாரியப்பன் இவருக்கு திருமணம் ஆகி சரசு, சின்னப்பொண்ணு என 2 மனைவிகள் உள்ளனர்.
இவர் கூலி வேலைக்கு செல்லும் நிலையில் இவருக்கு சின்ராசு, கோபால் என்ற இரு மகன்கள் உள்ளனர் இவர்களும் கூலி வேலைக்கு செல்கின்றனர். இவரது 2வது மனைவி சின்னபொண்ணு நடத்தையின் மீது மாரியப்பனுக்கு சந்தேகம் இருந்து வந்ததாகவும் இருவருக்கும் அவபோது குடும்பப் பிரச்சனை ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த ஆறு மாதங்களாகவே சொந்த நிலத்தை விற்பதற்க்கு மாரியப்பன் முயற்சி செய்து வந்ததாகவும், நிலத்தை விற்கக் கூடாது என மனைவி சின்னபொண்ணு தடுத்து வந்ததாகவும் இதனால் இவர்களுடைய அடிக்கடி தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.... இந்த நிலையில் வழக்கம் போல் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த மனைவி சின்னபொண்ணு மீது மாரியப்பன் அதிகாலை அளவில் தலையில் ஹோலோ பிரிக்ஸ் கல்லை போட்டு கொடூரமாக கொலை செய்ததாக கூறப்படுகிறது. இரத்த வெள்ளத்தில் கிடந்த மனைவியடனே தூங்கிவிட்டு அதிகாலை அளவில் காவல் நிலையத்தில் தானாக சென்று தன் மனைவியை தலையில் கல்லை போட்டு கொலை செய்ததாக போலீசாரிடம் ஒப்புதல் அளித்து சரணடைந்தார். பின்னர் சம்பவ இடத்திற்கு பேளுக்குறிச்சி போலீசார் இராசிபுரம் துணை கண்காணிப்பாளர் செந்தில்குமார் தலைமையில் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்ட நிலையில் கணவர் மாரியப்பனிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
செய்தியரளர் : முத்தையா

Comments
Post a Comment