நாமக்கல் மாவட்டம் விசாணம் ஊராட்சிக்கு உட்பட்ட விட்டப்பநாயக்கன் பட்டியை சேர்ந்த விவசாயி பாஸ்கர் இவர் விவசாயம் நிலத்தில் நேற்று இரவு 29 வெள்ளாடுகளை பட்டியில் போட்டு அடைத்து விட்டு வழக்கம் போல் உறங்க சென்றார் காலையில் எழுந்து பார்க்கும் போது 29 ஆடுகளும் இறந்து கிடந்தன
மேலும் 5 கோழிகளும் இறந்து கிடந்தன இது தொடர்பாக கிராம நிர்வாக அலுவலர் புகார் கொடுத்த பிறகு நஷ்ட ஈடு கேட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்துள்ளார்
இப்பகுதியில் அதிகமாக கோழிப்பண்ணைகள் இருக்கும் நிலையில் இறந்த கோழிகளை உண்பதற்கு நாய்கள் சுற்றி திரிவதாக கூறப்படுகிறது இந்த நிலையில் நாய்களின் அட்டகாசத்தை தடுத்து நிறுத்தி கால்நடைகளை உயிரிழப்பை தடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர் இறந்த 29 ஆடுகளை விவசாயி பாஸ்கர் அப்பகுதியில் குழி வெட்டி புதைத்தார்.
செய்தியாளர் ;முத்தையா

Comments
Post a Comment