வேலூர் கோட்டை ஸ்ரீஜலகண்டேஸ்வரர் கோயிலில் 25ம் தேதி கும்பாபிஷேகத்தை முன்னிட்டு ரூ. 4 கோடி மதிப்பீட்டில் தங்கக் கவசம்.!
வேலூர் கோட்டையில் உள்ள ஸ்ரீஅகிலாண்டேஸ்வரி சமேத ஸ்ரீ ஜலகண்டேஸ்வரர் ஆலய 4-வது மஹா கும்பாபிஷேக பெருவிழா வரும் 25-ம் தேதி காலை 11 மணிக்கு நடைபெற உள்ளது.
கோயில் கொடிமரம் மற்றும் கலசங்கள், மூலவர் ஆகியயோருக்கு சுமார் ரூ. 4 கோடி மதிப்பீட்டில் தங்க மூலாம் பூசப்பட்ட கொடிமரம் முழுவதும், சிறிய, பெரிய கலசங்கள் மூலவர் என ரூ.4 கோடியில் அமைக்க விறுவிறுப்பாக பணிகள் நடைபெற உள்ளது. தங்கமுலாம் பூசப்பட்ட கொடிமரத் தகடு, கலசம் ஆகியவற்றை பூஜை செய்து கோயில் நிர்வாகிகள் எடுத்துச் சென்றனர். இந்த பூஜையில் கும்பாபிஷேக கமிட்டி தலைவர் கலவை ஶ்ரீமௌனகுரு சச்சிதானந்த சுவாமிகள், செயலாளர் சுரேஷ்குமார், துணைத் தலைவர்கள் தர்மலிங்கம், அச்சுதானந்தம், ஓட்டல் உரிமையாளர்கள் சங்க மாநில தலைவர் வெங்கடசுப்பு, கும்பாபிஷேக தலைவர் சண்முகம் உள்ளிட்டோர் ஊர்வலமாக எடுத்துச் சென்றனர். கும்பாபிஷேகத்துக்கான அனைத்து ஏற்பாடுகளையும் மிக விரைவாக கமிட்டியினர் செய்து வருகின்றனர்.
செய்தியாளர் : வாசுதேவன்

Comments
Post a Comment