செங்குன்றம் நாரவாரிக்குப்பம்தேர்வுநிலை பேரூராட்சி சார்பில் நகர தூய்மைக்கான மக்கள் இயக்கம், திடக்கழிவு மேலாண்மை திட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சியின் மூலம் புழல் ஏரிக்கரையில் நடைபயிற்சி மேற்கொள்ளும் இடங்களில் தூய்மை பணியும் பிளாஸ்டிக் இல்லா பேரூராட்சியாக மாற்றுவதற்கு விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்கள் வழங்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. பேரூராட்சி தலைவரும் சிஎம்டிஏ உறுப்பினருமான கு.தமிழரசி குமார் தலைமை தாங்கி பேரணியை துவக்கி வைத்தார்.
பேரூராட்சி துணைத்தலைவர் ஆர்இஆர். விப்ரநாராயணன், லயன்ஸ் சங்க மாவட்டச் செயலாளர் இரா.ஏ.பாபு ஆகியோர் தூய்மைப் பணியை துவக்கி வைத்தனர்.கவுன்சிலர்கள் வினோதினி பாலாஜி, கா.கு. இலக்கியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.இப்பணியில் பேரூராட்சியுடன் இணைந்து சென்னை சோசியல் லயன்ஸ் சங்கம், ஆர்.பி. கோத்தி ஜெயின் மகளிர் கல்லூரி, எலைட் பள்ளி, ஸ்வாட், தமுமுக - மமக, இயற்கை பாதுகாப்புக் குழு உள்ளிட்ட பல்வேறு பொதுநலச் சங்கங்களை சேர்ந்த தன்னார்வலர்கள், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்ட 200க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு தூய்மைப் பணியில் ஈடுபட்டு புழல் ஏரிக்கரையை தூய்மைப்படுத்தினர். அதனைத் தொடர்ந்து புழல் ஏரிக்கரையில் இருந்து செங்குன்றம் பஜார் வரை தூய்மை விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. நிகழ்ச்சியின் முடிவில் சுகாதார ஆய்வாளர் மதியழகன் அனைவருக்கும் நன்றி கூறினார்.
செய்தியாளர் : ரஞ்சித்

Comments
Post a Comment