வேலூர் மாவட்ட ஆட்சியர் பெ.குமாரவேல் பாண்டியன் உத்தரவுப்படி பத்தலபல்லி சோதனை சாவடியில் பறக்கும் படையினர் வாகன தணிக்கை மேற்கொண்டனர்.
அப்போது பத்தலபள்ளி கிராமம் அருகாமையில் நூதன முறையில் பொன்னி அரிசி போன்று 25 கிலோ கொள்ளளவு கொண்ட பைகளில் நுட்பமாக தைத்து கடத்த முயன்ற 555 கிலோ ரேஷன் அரிசி மூட்டைகளை பறிமுதல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். பறக்கும் படை வட்டாட்சியர் விநாயகமூர்த்தி மேற்பார்வையில், களப்பணியாளர் திவாகர் தலைமையில், இந்த அதிரடி தணிக்கை நடந்தது. பிடிபட்ட அரிசி மூட்டைகளை குடியாத்தம் நுகர் பொருள் வாணிபக் கிடங்கில் பறக்கும் படையினர் ஒப்படைத்தனர்.
செய்தியாளர் : வாசுதேவன்

Comments
Post a Comment